தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவருவரான விஷ்ணு விஷாலுக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது அறிமுக இயக்குனரான பிரவீன்.கே என்பவரது இயக்கத்தில் ‘ஆர்யன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார், இந்த படத்தில் செல்வராகவன், ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் வாணி போஜன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், ராட்சசன் படத்திற்கு பின்னர் ஒரு வலுவான போலீஸ் கதாபாத்திரத்தில் விஷ்ணு இந்த படத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் வாணி போஜன் தடயவியல் நிபுணராகவும், ஷ்ரதா நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தலைப்புக்கும், நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் ஒரு உணர்வுபூர்வமான தொடர்பு இருக்கிறது, அதாவது விஷ்ணு விஷாலின் மகனின் பெயரும், படத்தின் தலைப்பும் ஒரே பெயர்.
ஆர்யன் படத்தின் தலைப்புக்கும், தனக்கும் உள்ள தொடர்பு குறித்து விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். ஆர்யன் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துக்கொண்டவர், அதில் எனது மகனின் பெயர் இப்போது என் படத்திற்கு பெயராக இருக்கிறது, இது எனக்கு மறக்கமுடியாத ஒரு தலைப்பாக மாறிவிட்டது என்று உணர்வுபூர்வமாக கூறியுள்ளார், மேலும் இதனுடன் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனரையும் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஆர்யன் படத்திற்கான பணிகள் பூஜையுடன் கோலாகலமாக ஆரம்பமாகிவிட்டது, இந்த படத்தின் பூஜையில் நடிகர் விஷ்ணு விஷால் அவரது மனைவி ஜுவாலா கட்டா மற்றும் மகன் ஆர்யன் ஆகியோருடன் கலந்து கொண்டிருக்கிறார்.
The pooja of #Aaryan pic.twitter.com/mYAnT9s54x
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) September 3, 2022
அதனைத்தொடர்ந்து நடிகர் விஷ்ணு தனது சமூக வலைதள பக்கத்தில் ஆர்யன் படத்தின் பூஜை படங்கள் சிலவற்றை வெளியிட்டவர், அதில் இந்த பிணைப்பு பற்றி ஒரு சிலரால் தான் உணரமுடியும், ஆர்யன் படத்திற்கு ஆர்யனுடன் சேர்ந்து ஜுவாலா கட்டா கிளாப் செய்ததற்கு நன்றி, இது எனக்கு எப்போது சூப்பர் ஸ்பெஷல் படமாக அமையும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பட நிகழ்ச்சியில் விஷ்ணு அவரது குடும்பத்தினருடன் கலந்துகொண்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.