சென்னை: சினிமா பாணியில் தயாரிப்பாளர் பாஸ்கரன் என்பவரை சின்மயா நகர் பகுதியில் கொடூரமாக கொலை செய்து பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.
முதலில் அடையாளம் தெரியாத பிணமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், போலீஸார் விசாரணையில் அது சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரின் உடல் என கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஸ்கரனை கொலை செய்த விபச்சார புரோக்கர் கணேசன் என்பவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தயாரிப்பாளர் பாஸ்கரன்
சாம்ராட் உள்ளிட்ட சில படங்களை தயாரித்தவர் சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன். ஆரம்பத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்துள்ளார், பின்னர் சினிமா ஃபைனான்சியராகி படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்து வந்துள்ளார். லக்ஷ்மி கரண் எண்டர்பிரைசஸ் என்கிற பட நிறுவனத்தை தொடங்கி 1997 ஆம் ஆண்டு முதல் படங்களை தயாரித்துள்ளார். ராம்கி நடித்த சாம்ராட்(1997), மற்றும் ஒயிட் ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்துள்ளார். அதன் பின்னர் சினிமா தயாரிப்பு வேலைகளில் ஈடுபடவில்லை என தெரிகிறது.
கொடூர கொலை
சென்னை மதுரவாயல் அடுத்த சின்மயா நகர் சாலையோரம் ஆற்றுப்பாலம் அருகே பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு கிடந்த சடலத்தைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் நடத்திய விசாரணையில் தயாரிப்பாளர் பாஸ்கரன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
விபச்சார புரோக்கர் கைது
அருகே இருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், பாஸ்கரனை கொலை செய்தது விருகம்பாக்கத்தை சேர்ந்த விபச்சார புரோக்கர் கணேசன் (35 வயது) என்பது தெரிய வந்த நிலையில், போலீசார் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பின்னர் செங்குன்றத்தில் பதுகியிருந்த கணேசன் கைது செய்யப்பட்டார்.
சபலத்தால் வந்த சண்டை
கடந்த இரண்டு வருடங்களுக்கு கொலை செய்யப்பட்ட நபர் தான் நடத்தும் விபச்சார விடுதிக்கு வருவதை வழக்கமாகக் வைத்துள்ளதாகவும். சம்பவ நேரத்தில் கொலை செய்யப்பட்ட நபர் கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வழக்கம்போல் பெண்களுடன் உல்லாசமாக இருக்க விபச்சார விடுதிக்கு வருவதாகவும் தனக்கு இரண்டு பெண்களை வர வைக்குமாறு கேட்டுள்ளார். இறந்த நபர் அதிக மது போதையில் விபச்சார விடுதிக்கு சென்றவர் உல்லாசம் அனுபவிக்க ஏற்பாடு செய்த பூங்கொடி, திவ்யா இரண்டு பெண்கள் வர தாமதமானதால் சண்டை போட்டுள்ளார்.
எப்படி இறந்தார்
நீ ஒரு மாமா பையன் புரோக்கர் தொழில் செய்து வருகிறாய் உன்னால் இரண்டு பெண்களை வர வைக்க முடியாதா என்று கேட்டு அசிங்கமாக திட்டி புரோக்கரை கீழே தள்ளி உள்ளார் அந்த தயாரிப்பாளர். கோபமடைந்த கணேசன் மீண்டும் இறந்த நபரை கைகளால் கழுத்தில் அடித்து கீழே தள்ளிவிட்டதில் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்து மயக்கம் அடைந்து கீழே விழுந்து சம்பவ இடத்தில் இறந்துள்ளார்.
பிளாஸ்டிக் கவரில் சுற்றி
இறந்த நபரின் பிரேதத்தை நைலான் கயிறின் மூலம் பிரேதத்தின் கை,கால் மற்றும் வாயில் துணியை வைத்து கட்டி பிளாஸ்டிக் கவர் மூலம் பிரேதத்தை மறைத்து தனது தோளில் தூக்கிக்கொண்டு Yamaha Fasino TN 10 BH 5007 என்கிற இருசக்கர வாகனம் மூலம் பிரேதத்தை சம்பவ இடத்தில் தூக்கி வீசி விட்டுச் சென்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.