கழிவுகளை மனிதனே அகற்றுவதை அரசு தடுக்க வேண்டும் – ஆதித்தமிழர் பேரவை அதியமான் பேட்டி

ஆதித்தமிழர் பேரவையின் முன்னாள் செயலாளர் நீலவேந்தனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது குறித்த ஆலோசனைகூட்டம் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் தலைமை சேலத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரவை சார்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான், “உச்ச நீதிமன்றமும் தமிழக அரசும் கடுமையாக விதித்துள்ள ஆணைகளின்படி மல குழியில் மனிதனை இறக்குகின்ற அந்த விஷயத்தை கடந்த காலங்களில் சட்டங்கள் இயற்றின பிறகும் இன்றைக்கும் தூய்மை தொழிலாளர்ககளை  சாக்கடைக்குள் இறக்கி வேலை வாங்குகிற நிலை இருக்கிறது.  மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நிலை நீடித்து வருகிறது.

அப்படி வேலை செய்யும்போது யாரேனும் இறந்துவிட்டால் அதற்கான பொறுப்பு அந்தந்த ஆணையர்களுக்கு உள்ளது என்று தற்பொழுது  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.

கடந்த காலங்களில் இந்தச் சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் இருந்து வந்தனர். தற்போதைய தமிழக அரசு இதனை செயல்படுத்தும் என நம்பிக்கை இருக்கிறது. கடந்த ஓராண்டு காலமாக தமிழக அரசின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது.இதுவரைக்கும் இருந்த ஆட்சியாளர்களைவிட தற்பொழுது நடைபெற்று வரும் அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த ஆட்சியில் எப்படியாவது எதையாவது சொல்லி கலவரத்தை மூட்ட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதையாவது உளறிக்கொண்டே இருக்கின்றார்.தமிழகத்தில் ஏதேனும் அசம்பாவிதத்தை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசி வருகிறார்.

நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை உடனடியாக மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கினால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய்,  காலை சிற்றுண்டி திட்டம் மிகுந்த வரவேற்பை பெறும் இது மாணவிகளுக்கு அருமையான திட்டம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.