திருப்போரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

திருப்போரூர்: திருப்போரூரில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சி சார்பில்,   6வது வார்டுக்கு உட்பட்ட அபிராமிநகர் பகுதியில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி பேரூராட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று கொசு ஒழிப்பான் புகை மருந்து தெளித்தனர்.

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்கினர். தெருக்களில் உள்ள மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களிலும் மருந்து தெளிக்கப்பட்டது. முகாமில் 6வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் லோகநாதன், பேரூராட்சி மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.