காதல் மோசடி.. ஆப் மூலம் பல ஆயிரம் டாலர் மோசடி.. சொகுசு கார்கள், ரோலக்ஸ் வாட்ச், தங்க நகை!

டெக்சாஸை சேர்ந்த பெண் காதல் என்று மோசடி வலையின் மூலம் 2.6 மில்லியன் டாலர் மோசடி செய்து பலரையும் ஏமாற்றியுள்ளார்.

ஹூஸ்டனைச் சேர்ந்த 31 வயதான டொமினிக் கோல்டன், 1.3 மில்லியன் டாலர் மதிப்பிலான ரொக்கம், காசோலைகள், மணியார்டர், வயர் பரிவர்த்தனைகளில் மோசடி மூலம் பணம் பெற்றுள்ளார்.

இந்த பணம் அனைத்தும் மோசடியாக வணிக நிறுவனங்கள், போலியான தனி நபர் பெயர் என பலவற்றின் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ரூ.4 கோடி மோசடி.. கிரெடிட் கார்டில் இப்படி கூட மோசடி நடக்கலாம்.. எச்சரிக்கையா இருங்க!

காஸ்ட்லியான பொருட்கள்

காஸ்ட்லியான பொருட்கள்

கோல்டன் இவ்வாறு மோசடியாக பெற்ற பணத்தில் இரண்டு சொகுசு கார்களை வாங்கியுள்ளார். கடந்த 2018 பென்ட்லி பெண்டகோ மற்றும் 2017 மெர்சிடிஸ் இ கிளாஸ் , மூன்று ரோலக்ஸ் வாட்ச்கள், 16 இன்ச் தங்க செயின், 24 இன்ச் தங்க செயின்கள் உள்பட பல ஏராளமான விலைமதிப்பற்ற பொருட்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இணையம் மூலம் மோசடி

இணையம் மூலம் மோசடி

இந்த ஏமாற்று மோசடிகள் அனைத்தும் இணையம் மூலமாக ஆப் வழியாக தொடர்பு கொண்டு ஏமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆப் மூலமாக தொடர்பு கொண்டவர்கள் அனைவருமே சதித்திட்டம் ஏமாற்றப்பட்டுள்ளனர். மேற்கண்ட அஞ்சல் மோசடி மற்றும் மற்ற சில பரிவர்த்தனைகளை மோசடியாக பெற்றத்தை ஒப்புக் கொண்டுள்ள ஏமாற்றியதை அடுத்து, டிசம்பர் மாதம் அவருக்கு தண்டை வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 காஸ்ட்லியான பரிசு
 

காஸ்ட்லியான பரிசு

மேற்கண்ட மோசடிகள் மூலம் பெறப்பட்ட பணத்தில் இருந்து, சொகுசு கார்கள், மூன்று கைத்துப்பாக்கிகள், மூன்று ரோலக்ஸ் வாட்ஸ்கள், தங்க செயின்கள் வாங்கியதாகவும் கோல்டன் ஒப்புக் கொண்டுள்ளார்.

பொருளாதார மோசடி

பொருளாதார மோசடி

இதுபோன்ற எண்ணற்ற காதல் ஏமாற்று மோசடிகள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆக அதனை நம்பி ஏமாறமல் பாதுகாப்பாக இருப்பது மிக அவசியம். இதன் மூலம் பொருளதார ரீதியாக பெரும் இழப்பினை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cars கார்கள்

English summary

Woman scams unsuspecting men out of luxury cars, rolex watches, gold chain through Romance scam

Woman scams unsuspecting men out of luxury cars, rolex watches, gold chain through Romance scam/காதல் மோசடி.. ஆப் மூலம் பல ஆயிரம் டாலர் மோசடி.. சொகுசு கார்கள், ரோலக்ஸ் வாட்ச், தங்க நகை!

Story first published: Sunday, September 4, 2022, 16:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.