டெல்லி: டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் மோடிஇரங்கல் தெரிவித்துள்ளார். சைரஸ் மிஸ்திரியின் அகால மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மறைவு வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள் மற்றும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பிரதமர் மோடி டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.