சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். காலத்தால் அழிக்க முடியாத கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியப் பெருமக்களே எனவும் இடையறாது பணிசெய்து மென்மேலும் திறம்பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க வாழ்த்தியுள்ளார்.