அதிமுக தலைமை பதவிக்கு குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறது. ஒருபுறம்
, மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமி வரிந்துகட்டிக்கொண்டு நிற்க அதிமுகவின் எதிர்காலத்தை நினைத்து பார்த்து தொண்டர்கள் கவலையில் மூழ்கி உள்ளனர்.
பெருவாரியான முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை தனது ஆதரவாளர்களாக வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக முடி சூட்டிக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த அதிமுக பொருளாளர் பதவியில் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்து கட்சி வட்டாரத்தியே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டினார்.
இதுதொடர்பான வழக்கில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தனி நீதிபதி தீர்ப்பளித்ததால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும் இது தங்கள் தரப்புக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாக கருதி தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமித்தல், எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளை ஓபிஎஸ் ஆதரவாளர்களாக மாற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் யாரும் எதிர்பாராத வகையில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வெளியானது.
இதனால், எடப்பாடி பழனிச்சாமி வட்டாரத்தில் மீண்டும் மகிழ்ச்சி திரும்பி உள்ளது. அதே சமயம், எடப்பாடி நியமனஙக்ளும் செல்லும் என்று, தீர்ப்பு மறைமுகமாக உணர்த்துவதால் இந்த ஆண்டு தேவர் ஜெயந்திக்கு, தங்க கவசம் அணிவிக்கும் வாய்ப்பும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கிடைத்து இருக்கிறது.
இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக, ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ? என
கவலை அடைந்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம், ‘தேவர் ஜெயந்திக்கு தங்க கவசத்தை எடுத்து கொடுக்கலாம் என, நினைத்து இருந்தேன். ஓபிஎஸ் மேல்முறையீடு அதை தடுத்துடும் போலயே’ என கூறி வருத்தப்பட்டுள்ளார்.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‘அண்ணே.. 4 நாளில் சோலிய முடிச்சுடலாம். எதை பற்றியும் கவலைப்படாதீங்க. டெல்லி வழக்கறிஞர்கள் நம்பிக்கையான தகவல் தர்றாங்க.
இது, எனது கவுரவப் பிரச்சனை. வெயிட் பன்னுங்க. ஒரு கை பார்த்துடுவோம். நீங்கள் ஆசைப்பட்டது, கண்டிப்பாக நடக்கும்’ என்று தெம்பூட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.