தாய், தந்தை இறந்த சோகம் மகள் தூக்கிட்டு தற்கொலை

மதுரை: தாய், தந்தை இறந்த சோகத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை உலகனேரி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி கடந்த 6 மாதத்திற்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். முருகன் கடந்த சில நாட்களுக்கு முன் உசிலம்பட்டி அருகே ஒரு விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரையும், மனநலம் பாதிக்கப்பட்ட தங்கையையும், முருகன் மூத்த மகள் அமுதா(24)  கவனித்து வந்தார். இதற்கிடையே தந்தை முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதனையறிந்த அமுதா சோகத்தில் மாட்டுத்தாவணி பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மாட்டுத்தாவணி போலீசார், அமுதாவின் உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய், தந்தை, பராமரித்து வந்த அக்கா ஆகியோர் இறந்ததால், கவனிக்க யாருமின்றி மனநலம் பாதிக்கப்பட்ட முருகனின் இளைய மகள் தவித்து வருகிறார். இவரை மதுரையில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.