2014 தமிழக அரசு விருது..சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார் !

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும், ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இது தடைப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு மீண்டும் திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது.

அதன்படி கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை அறிவித்தது. இந்த விருது வழங்கும் விழா, தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இதில், காக்கா முட்டை படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

2014ம் ஆண்டுக்கான விருதுகள்

சிறந்த படங்களுக்கான பரிசுகள்

சிறந்த படம் – முதல் பரிசு : குற்றம் கடிதல்

சிறந்த படம் – இரண்டாம் பரிசு : கோலி சோடா

சிறந்த படம் – மூன்றாம் பரிசு : நிமிர்ந்துநில்

சிறந்த படம் – சிறப்புப் பரிசு : காக்கா முட்டை

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்

சிறந்த நடிகர் : சித்தார்த் (காவியத் தலைவன்)

சிறந்த நடிகை : : ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)

சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) : பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா)

சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) : ஆனந்தி (கயல்)

சிறந்த வில்லன் நடிகர் : பிரிதிவிராஜ் (காவியத் தலைவன்)

சிறந்த நகைச்சுவை நடிகர் : கே.ஆர். சிங்கமுத்து (பல்வேறு படங்கள்)

சிறந்த குணச்சித்திர நடிகர் : நாசர் (காவியத் தலைவன்)

சிறந்த குணச்சித்திர நடிகை : குயிலி (காவியத் தலைவன்)

சிறந்த இயக்குநர் : ராகவன் (மஞ்சப்பை)

சிறந்த கதையாசிரியர் : எச்.வினோத் (சதுரங்க வேட்டை)

சிறந்த உரையாடல் ஆசிரியர் : வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி)

சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரகுமான் (காவியத் தலைவன்)

சிறந்த பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் (சைவம்) (மறைவு)

சிறந்த பின்னணிப் பாடகர் : ஹரிச்சரன் (காவியத் தலைவன்)

சிறந்த பின்னணிப் பாடகி : உத்ரா உன்னிகிருஷ்ணன் (சைவம்)

சிறந்த ஒளிப்பதிவாளர் : நிரவ்ஷா (காவியத் தலைவன்)

சிறந்த ஒலிப்பதிவாளர் : ராஜ்கிருஷ்ணன் (குக்கூ)

சிறந்த திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்) : ரமேஷ் (நிமிர்ந்துநில்)

சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) : சந்தானம் (காவியத் தலைவன்)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் : திலீப் சுப்பராயன் (மஞ்சப்பை, ரா)

சிறந்த நடன ஆசிரியர் : காயத்திரி ரகுராம் (நிமிர்ந்துநில்)

சிறந்த ஓப்பனைக் கலைஞர் : பட்டணம் முகம்மது ரஷீத் (காவியத் தலைவன்)

சிறந்த தையற் கலைஞர் : செல்வம் (காவியத் தலைவன்)

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) : சாந்தகுமார் (நிமிர்ந்துநில்)

சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) : மீனலோசினி (மஞ்சப்பை)

சிறந்த குழந்தை நட்சத்திரம் : 1.விக்னேஷ், (காக்கா முட்டை), 2.ரமேஷ் (காக்கா முட்டை)

காக்கா முட்டை

காக்கா முட்டை

இதில்,காகா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்து அசத்தி இருப்பார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2014ம் ஆண்டின் சிறந்த படமாக காக்கா முட்டை தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த நடிகைக்கான விருதை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சி

ஐஸ்வர்யா ராஜேஷ் மகிழ்ச்சி

இதையடுத்து,பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை படத்திற்கு இதுவரை 5 தேசிய விருதுகள் பெற்றிருந்தாலும் தமிழ்நாடு அரசின் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். மேலும், இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விக்னேஷ் மற்றும் ரமேஷ் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை வென்றனர்.

சிறந்த நடிகர் ஆர்யா

சிறந்த நடிகர் ஆர்யா

இதில் ராஜாராணி படத்தில் சிறப்பாக நடித்த ஆர்யாவுக்கு விருது வழங்கப்பட்டது. அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பிரசன்னா பெற்று கொண்டார் இவருக்கு தங்க பதக்கம் , விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.