புதுச்சேரி: உடல் நலக்குறைவு காரணமாக புதுவை அமைச் சர் நமச்சிவாயம் மருத்துவ மனை யில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்.புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வரும் 8ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் ஓய்வின்றி அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அரும்பார்த்தபுரத்தில் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இரவு 10 மணியளவில் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்கள் முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன் பேரில் சிகிச்சை பெற்று வருகிறார்.