ஊபர் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனம் நகரங்கள் மட்டுமல்லாமல் மாநிலம் – மாநிலம் இடையிலான டாக்ஸி சேவையையும் வழங்கி வருகிறது.
அண்மையில் ஓட்டுநர்கள் டாக்ஸி புக்கிங்கை ஏற்றுக்கொண்டு பிறகு அதனை ரத்து செய்வதைத் தடுக்க, ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எங்கு பயணியை டிராப் செய்ய வேண்டும் என்ற விவரங்களைக் காட்டத் தொடங்கியது.
இருந்தாலும் ஊபரில் ஒரு புகார் தொடர்ந்து நிவர்த்தி செய்யப்படாமலே உள்ளது.
ராபிட்டோ பைக் டாக்ஸி நிறுவனத்தின் பிரம்மாண்ட திட்டம்.. போட்டியாளர்கள் கவலை!
என்ன புகார்?
ஊபரில் பயணம் செய்யும் போது சில சமயங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஜிபிஎஸ் சில நேரங்களில் ஊரைச்சுற்றிக்கொண்டு அழைத்துச் செல்லுகிறது. எனவே கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடுகிறது என்பதே அந்த புகார் ஆகும்.
தீர்வு
பயணிகளின் இந்த நீண்ட நாள் புகாருக்கு தீர்வை கொண்டு வந்துள்ளது ஊபர். இவற்றைச் செய்வதன் மூலம், உண்மையாகவே உங்கள் பயணத்திற்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் அதனைத் திரும்பப் பெறலாம்.
எப்படி?
படி 1: ஊபர் செயலியை திறந்து, கணக்கு(Account) என்பதை கிளிக் செய்யவும்.
படி 2: பின்னர் பயணங்கள் (Trips) என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் செய்த எல்லா பயணங்களின் விவரங்களும் பட்டியலிடப்படும்.
கூடுதல் கட்டணம் வசூலித்த வழித்தடங்கள்
படி 3: கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட வழித்தடத்தைத் தேர்வு செய்யுங்கள்.
படி 4: பயணத்திற்கான உதவி (Get Trip Help) என்பதை கிளிக் செய்யுங்கள்.
படி 5: அதில் உங்கள் பயணத்திற்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதற்கான புகாரை அளிக்கவும்.
படி 6: ஓட்டுநர் ஊரை சுற்றிக்கொண்டு சென்று இருந்தால் அதனையும் தெரிவிக்கலாம்.
படி 7: பயணத்தின் தேதியை குறிப்பிட்ட பிறகு, புகாரை சமர்ப்பியுங்கள்.
பணம் எப்போது திரும்ப கிடைக்கும்?
இந்த படிகளை எல்லாம் பின்பற்றும் போது, உங்கள் பயணத்துக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்த பிறகு, புக் செய்யும் போது காண்பித்த கட்டணத்தை விட கூடுதலாக இருக்கும் போது அது திரும்ப வழங்கப்படும்.
UBER Taxi Taken You In Longer Route And Charged Extra? Do You Know How To Get Refund?
ஊபர் உங்களை ஊரைச்சுற்றி அழைத்துச் சென்றதா? கூடுதல் கட்டணம் வசூலித்ததா? எப்படி அதனைத் திரும்பப் பெறுவது தெரியுமா? | UBER Taxi Taken You In Longer Route And Charged Extra? Do You Know How To Get Refund?