ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. பாஜக பிளானை நொறுக்குவாரா ஹேமந்த் சோரன்?

ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி குறித்த கேள்வி நிலவி வரும் நிலையில், இன்று அவர் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளது.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை இவர் தனது முதல்வர் பதவியை பயன்படுத்தி சட்ட விரோதமாக குத்தகைக்கு எடுத்ததாக புகார் உள்ளது.

இந்த குத்தகை மூலம் இவர் ஆதாயம் அடைந்ததாக வைக்கப்பட்ட புகாரில் பாஜக இவரை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக பாஜகவினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

ஜார்கண்ட்

இந்த நிலையில் பாஜக கோரிக்கையை ஏற்று இவரை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜாா்க்கண்ட் ஆளுநா் ரமேஷ் பைஸுக்கு தோ்தல் ஆணையம் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரபூர்வ பரிந்துரை கடிதம் இன்னும் வெளியாகவில்லை. ஆளுநர் இதில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. விரைவில் எம்எல்ஏ பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹேமந்த் சோரன்

ஹேமந்த் சோரன்

முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி குறித்த கேள்வி நிலவி வரும் நிலையில், இன்று அவர் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளது. அங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து இந்த கட்சி கூட்டணி ஆட்சி அமைத்து வருகிறது. அங்கு சட்டசபையில் மொத்தம் 81 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பாஜக பிளான்

பாஜக பிளான்

அதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிற்கு 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 1 எம்எல்ஏ உள்ளார். எதிர்க்கட்சியான பாஜகவிற்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த நிலையில்தான் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் அரசு பங்கெடுக்க உள்ளது. சமீபத்தில் பாஜக சார்பாக இதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதோடு ஆளுநரும் திடீரென டெல்லி சென்றார்.

மகாராஷ்டிரா நிலை

மகாராஷ்டிரா நிலை

இதனால் அங்கு பாஜக ஆட்சி அமைக்க திட்டம் எதுவும் போடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்களை மொத்தமாக அணி மாற வைத்து, பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து அங்கு பாஜக கூட்டணி ஆட்சி வந்தது. அதேபோல் ஜார்கண்டிலும் ஹேமந்த் சோரனை தனித்து விட்டு.. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை உடைத்து பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிடுவதாக புகார் எழுந்துள்ளது.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

இந்த நிலையில்தான் ஹேமந்த் சோரன் இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். தற்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள் எல்லோரும் சட்டீஸ்கரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாஜக இவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இவர்களை அங்கு உள்ள ரிசார்ட்டில் ஹேமந்த் சோரன் தங்க வைத்துள்ளார். இவர்கள் இன்று காலை ஜார்கண்ட் வருவார்கள். இன்று காலை 10 மணிக்கு பின்பு அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.