பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகுகிறாரா இந்த பிரபலம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை
:
விஜய்
டிவியின்
பிரபல
தொடராக
உள்ளது
பாண்டியன்
ஸ்டோர்ஸ்.
அண்ணன்
-தம்பிகள்
பாசத்தை
பேசும்
இந்தத்
தொடர்
ரசிகர்களை
அதிகமாக
கவர்ந்து
வருகிறது.

அடுத்தடுத்த
பரபரப்பான
கட்டங்களுடன்
இந்தத்
தொடர்
சிறப்பான
எபிசோட்களை
ரசிகர்களுக்கு
கொடுத்து
வருகிறது.

டிஆர்பியிலும்
முதல்
பத்து
இடங்களில்
பாண்டியன்
ஸ்டோர்ஸ்
தொடர்
காணப்படுகிறது.

விஜய்
டிவி
தொடர்கள்

விஜய்
டிவியின்
சீரியல்கள்
அனைத்தும்
ரசிகர்களை
வெகுவாக
கவர்ந்து
வருகிறது.
அந்த
வகையில்
அந்த
சேனலின்
பாண்டியன்
ஸ்டோர்ஸ்
தொடர்
மிகவும்
பரபரப்பான
மற்றும்
குடும்ப
சென்டிமெண்டை
மையமாக
கொண்ட
எபிசோட்களை
ரசிகர்களுக்கு
தொடர்ந்து
கொடுத்து
வருகிறது.

அண்ணன் -தம்பி கேரக்டர்கள்

அண்ணன்
-தம்பி
கேரக்டர்கள்

இந்தத்
தொடரின்
மூர்த்தி,
கண்ணன்,
ஜீவா
மற்றும்
கதிர்
என
நான்கு
அண்ணன்
-தம்பிகள்
மற்றும்
அவர்களின்
துணைகள்
என
கூட்டுக்
குடும்பமாக
வாழ்ந்துவந்த
இவர்களின்
வாழ்க்கையில்
ஏற்பட்ட
மாற்றம்
மற்றும்
கதிர்
-முல்லை
வீட்டை
விட்டு
வெளியேறியது
என
அடுத்தடுத்த
எபிசோட்கள்
ரசிகர்களை
வெகுவாக
கவர்ந்தன.

கதிர் -முல்லை கேரக்டர்

கதிர்
-முல்லை
கேரக்டர்

தொடர்ந்து
கதிர்
மற்றும்
முல்லை
இருவரும்
இணைந்து
ஹோட்டல்
ஒன்றை
துவங்க,
அதற்கு
குடும்பத்தினர்
மறைமுகமாக
உதவி
செய்து
வருகின்றனர்.
அவர்களுக்கு
ஆர்டர்
பிடித்துக்
கொடுப்பதில்
இருந்து
பல
விஷயங்களை
செய்து
வருகின்றனர்.
மேலும்
கண்ணனுக்கு
வங்கி
வேலை
கிடைப்பது,
ஐஸ்வர்யா
பியூட்டி
பார்லர்
துவங்குவது
என்றும்
பல
காட்சிகள்
அரங்கேறி
வருகின்றன.

சினிமா வாய்ப்புகள்

சினிமா
வாய்ப்புகள்

இந்த
தொடரின்
முக்கியமான
ஜோடி
என்றால்
அது
கதிர்
மற்றும்
முல்லைதான்.
இந்தத்
தொடரில்
முல்லையாக
நடித்து
வருபவர்
தற்போது
இந்தத்
தொடரில்
இருந்து
நீங்க
உள்ளதாக
தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இவருக்கு
சினிமாவில்
நடிக்க
வாய்ப்புகள்
கிடைத்துவரும்
நிலையில்
இந்த
முடிவை
காவ்யா
எடுத்துள்ளதாக
கூறப்படுகிறது.

தொடரிலிருந்து விலகல்

தொடரிலிருந்து
விலகல்

பாரதி
கண்ணம்மா
தொடர்
மூலம்
சின்னத்திரையில்
என்ட்ரி
கொடுத்த
காவ்யா,
தொடர்ந்து
நடிகை
சித்ரா
மறைவிற்கு
பிறகு
அவரது
முல்லை
கேரக்டரில்
பாண்டியன்
ஸ்டோர்ஸ்
தொடரில்
நடித்து
ரசிகர்களை
கவர்ந்தார்.
இந்நிலையில்
இவர்
இந்தத்
தொடரிலிருந்து
விலகவுள்ளதாக
கூறப்படுவது
ரசிகர்களுக்கு
அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

கதிர் -முல்லை ஜோடி

கதிர்
-முல்லை
ஜோடி

பாண்டியன்
ஸ்டோர்ஸ்
தொடரில்
கதிர்
-முல்லை
ஜோடி
ரசிகர்களை
வெகுவாக
கவர்ந்து
வருகிறது.
இவர்கள்
வீட்டிலிருந்து
வெளியேறியபோது
ரசிகர்களிடையே
கருத்துக்
கணிப்பு
நடத்தப்பட்டது.
அப்போது
ரசிகர்கள்
அனைவருமே
இவர்கள்
இருவரும்
திரும்ப
வீட்டிற்கு
வரவேண்டும்
என்றே
கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.