ஆசிய கோப்பையில் பாகிஸ்தானிடம் மண்ணை கவ்விய இந்தியா! குமுறிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிடம் தோற்றது குறித்து பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா.

இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது என பேட்டி.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் இந்திய அணி மண்ணை கவ்விய நிலையில் தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானிடம் மண்ணை கவ்விய இந்தியா! குமுறிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா | Asiacup2022 India Lost To Pakistan Rohit Sharma

இந்நிலையில் போட்டிக்கு பின் தோல்வி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது. 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என நான் நினைத்தேன், அது தவறாக போய்விட்டது.

எந்த மைதானத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் 180 ரன்கள் அடித்தால் அது நல்ல ‘ஸ்கோர்’ என்ற மனநிலையில் இருந்து மாறவேண்டும். பாகிஸ்தான் வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் எங்களை விட சிறப்பாக ஆடினர்.

இது மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டி என்பது எங்களுக்கு தெரியும். ரிஸ்வான் மற்றும் நவாஸ் இடையே கூட்டணி நீடித்தபோதும் நாங்கள் பொறுமையாக இருந்தோம். ஆனால், அந்த கூட்டணி சற்று நீண்ட நேரம் நீடித்துவிட்டது என கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.