சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும்நடிகருமான சரத்குமார் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
ஆன்லைன் ரம்மி தவறு என்றால் அரசு தடை செய்யட்டும். அரசு தடை செய்தால், ஏன் விளம்பரங்களில் நடிக்க வேண்டி வருகிறது?
குடிப்பழக்கம் குடியைக் கெடுக்கும் என்பதால், குடிக்காமல் இருக்கிறார்களா? புகைப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு எனும்போது, தயாரிப்பதை ஏன் நிறுத்தவில்லை? அதுபோல, இணையத்தில் நல்லவற்றை எடுத்துக்கொள்ளுங்கள், தீயவற்றை விட்டுவிடுங்கள்.
நாம் சுயகட்டுப்பாட்டுடன் இருந்தால், அவர்கள் கடையை மூடிவிட்டு போய்விடுவார்கள். அதை விட்டுவிட்டு, நான் ரம்மி விளம்பரத்தில் நடிப்பதால்தான் மக்கள் கெட்டுப் போகிறார்கள் என்பதை ஏற்க முடியாது என்றார்.