பெட்ரோ- டீசல் விலை
சென்னையில் 106வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை .ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா தோல்வி
ஆசியகோப்பை: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. 182 ரன்கள் இலக்கை நிர்ணயித்த இந்தியாவை 19.5 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.
45 பேருக்கு நல்லாசிரியர் விருது
ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உள்பட 45 பேருக்கு நல்லாசிரியர் விருது டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
புதுமைப் பெண்’ திட்டம் தொடக்க விழா ‘புதுமைப் பெண்’ திட்டம் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின்
வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை சென்னை, துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,776க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ.4,722க்கு விற்பனை
கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைவு எதிரொலி – கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை பீன்ஸ் ரூ.50, முருங்கைக்காய் ரூ.70க்கும் விற்பனை தொடர் மழையால் தக்காளி விலை 3 மடங்கு உயர்வு
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் இன்று மேல்முறையீடு. தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டுமென இபிஎஸ் கேவியட் மனுத்தாக்கல்.
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகளும் இன்று திறப்பு. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.