இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தது இந்திய வர்த்தகத் துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கிய உயிரிழந்தார். பால்கர் அருகே நடந்த விபத்தில், சைரஸ் மிஸ்திரி உள்ளிட்ட 4 பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சைரஸ் மிஸ்திரி-யின் மரணம் டாடா சன்ஸ் – ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் மத்தியிலான பிரச்சனைகளுக்கு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டாடா சன்ஸின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் உயிரிழப்பு.. !

டாடா சன்ஸ்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகச் சைரஸ் மிஸ்திரி இருந்த காலக்கட்டத்தில் அவர் எடுத்த சில முடிவுகள் ரத்தன் டாடா உட்பட டாடா டிரஸ்ட் அமைப்பு மற்றும் பங்குதாரர்களுக்குப் பெரும் பிரச்சனையாக மாறியது. இதன் எதிரொலியாகப் பங்குதாரர்கள் ஆதரவுடன் சைரஸ் மிஸ்திரி-ஐ 2016ல் டாடா சன்ஸ் நிறுவனத்தை விட்டும், தலைவர் பதவியை விட்டும் நீக்கப்பட்டார்.

ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப்
டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா டிரஸ்ட் அமைப்பிற்கு அடுத்தபடியாக அதிகப் பங்குகளை வைத்திருப்பது ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் தான். இதன் அடிப்படையில் தான் முதல் முறையாக வெளியாட்களான சைரஸ் மிஸ்திரி-ஐ டாடா சன்ஸ் தலைமை பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

டாடா – மிஸ்திரி
டாடா சன்ஸ் நிறுவனத்தின் சைரஸ் மிஸ்திரி-யின் குடும்பம் சுமார் 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதேபோல் ரத்தன் டாடா-வின் சகோதரரான நியோல் டாடா, சைரஸ் மிஸ்திரி-யின் சகோதரி ஆலு அவர்களைத் திருமணம் செய்துள்ளார். டாடா சன்ஸ் – ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் மத்தியில் வர்த்தகம் தாண்டி குடும்ப அளவிலும் நெருக்கம் அதிகமாக உள்ளது.

சைரஸ் மிஸ்திரி
இப்படியிருக்கும் நிலையிலும் 2016ல் டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி வெளியேற்றிய பின்பு டாடா சன்ஸ் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று வரையில் நடைபெற்று வரும் வேளையில் ரைசஸ் மிஸ்திரி தொடர்பான டாடா சன்ஸ் – ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் மத்தியிலான வழக்கு என்ன ஆகும்.

வழக்கு
ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த போது டாடா சன்ஸ் தொடர்பான வழக்கில் பங்கு விற்பனை தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டது, ஆனால் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் சைரஸ் மரணம் டாடா சன்ஸ் – ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் மத்தியிலான வழக்கு அடுத்தச் சில வாரத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Cyrus Mistry death; Does it bring an end to Tata-Shapoorji Pallonji legal spat?
Cyrus Mistry death; Does it end of Tata-Shapoorji Pallonji legal battle from 2016. October 2016, cyrus Mistry was ousted as tata sons chairman by the board, which met and voted against his continuance. This led legal battle between Tata-Shapoorji Pallonji group.