வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோரமங்களா உள்ளிட்ட பெங்களூருவின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது தொடர்பாக பொது மக்கள் சிலர் கூறுகையில், காலையில் எழுந்து தான் சாலைகளில் தண்ணீர் தேங்கியதை பார்த்தோம். சாலைகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. பல கட்டடங்கள் கீழ் தளங்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. பாதாள சாக்கடை அமைப்பு மோசமாக உள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்ற சூழ்நிலை உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. சாலை அமைக்கும் போது பாதாள சாக்கடை திட்டம் சரியாக பராமரிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement