இருமடங்காக உயர்ந்த தக்காளி விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னை கோயம்பேடு சந்தைய பொறுத்தவரை தக்காளி விலை இன்று 1 கிலோ 45 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சமீப காலமாக, அரிசி சமையல் எண்ணெய் போன்றவைகள் அனைத்தும் விலை உயர்ந்த நிலையில், இன்று தக்காளி விலை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் மக்கள் அதிப்படியான காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.

அதேபோல் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெடிற்கு கர்நாடகா, ஆந்திரா, பகுதியில் இருந்து தக்காளி வரத்து உள்ளது. இது தவிர தொண்டாமுத்தூர், மதுக்கரை, பாலத்துறை, நாச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் விலையும் தக்காளி கோவை மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்த தக்காளியை சில்லறை வியாபாரிகள் வாங்கி கடைகளில் விற்பனை செய்கின்றனர். இந்த மார்க்கெட்டில் 25 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ரூபாய் 450 முதல் 500 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட பெட்டி இன்று ரூபாய் 900 முதல் ஆறு ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் கடைகளில் கிலோ ரூபாய் 25க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, ஒரு சில இடங்களில் ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

பருவமலையின் காரணமாக தக்காளி வரத்து  குறைவதா இருப்பதாகவும் இதனால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாகவும் அதுபோல்  மூர்த்தா தினம், ஓணப்பண்டிகை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிக்கு அதிக அளவு தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் மழையால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது எனவே தொடர்ந்து விலை அதிகமாக வருகிறது குறிப்பாக தக்காளி பயிரிடப்பட்ட இடங்களில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

அறுவடைக்கு தயாரான தக்காளி டன் கணக்கில் அழுகி உள்ளது. விளைச்சல் குறைவாக உள்ளது இதனால் வெளிமா மாநிலங்களில் மாவட்டங்களில் இருந்தும் கோவைக்கு மிகக் குறைவான அளவில் தக்காளி வரத்து இருக்கிறது இதனால் விலை ஏற்றம் காணப்படுகிறது.இந்த திடீர் விளைவு உயர்வாள் வியாபாரிகள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.