டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றிய சைரஸ் மிஸ்ட்ரி நேற்று கார் விபத்தில் காலமான சம்பவம் தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் டாடா நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் உள்பட பல பிரமுகர்களும் சைரஸ் மிஸ்ட்ரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் காரில் பயணம் செய்த சைரஸ் மிஸ்ட்ரி சீட்பெல்ட் அணிய வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சைரஸ் மிஸ்ட்ரி அவர்களின் சில அறியப்படாத தகவல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
சைரஸ் மிஸ்திரி மரணம்.. டாடா சன்ஸ் – ஷாபூர்ஜி பலோன்ஜி குரூப் பிரச்சனைகளுக்கு முடிவா..?
சைரஸ் மிஸ்ட்ரி
ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் ஒரு அங்கமான ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனியின் நிர்வாக இயக்குனரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான சைரஸ் பல்லோன்ஜி மிஸ்திரி கார் விபத்தில் மரணமடைந்தார்.
ஷபூர்ஜி பல்லோன்ஜி & கோ. லிமிடெட்
1991 ஆம் ஆண்டில், சைரஸ் மிஸ்ட்ரி குடும்பத்திற்கு சொந்தமான கட்டுமான வணிகமான ஷபூர்ஜி பல்லோன்ஜி & கோ. லிமிடெட்டின் இயக்குநராகப் பணியாற்ற தொடங்கினார். அவர் டாடா சன்ஸ் மற்றும் டாடா குழுமத்தின் தலைவராகவும், ஷபூர்ஜி பல்லோன்ஜி & கம்பெனியின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
டாடா குழுமம்
சைரஸ் மிஸ்ட்ரி தந்தை டாடா சன்ஸ் குழுவில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு வருடம் கழித்து, 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18.4 சதவீத பங்குகளுடன் சைரஸ் மிஸ்திரி டாடாவில் இணைந்தார்.
பணி
செப்டம்பர் 24, 1990 முதல், அக்டோபர் 26, 2009 வரை, அவர் டாடா எல்க்ஸி லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும், செப்டம்பர் 18, 2006 வரை டாடா பவர் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். 2013ஆம் ஆண்டில் டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் டாடா இண்டஸ்ட்ரிஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ், டாடா பவர், டாடா டெலிசர்வீஸஸ், இந்தியன் ஹோட்டல் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் போன்றவற்றில் பணியாற்றினார்.
தீர்ப்பு
2016ஆம் ஆண்டு அக்டோபரில் டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2020ஆம் ஆண்டு தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இருப்பினும் அவர் மீண்டும் டாடா குழுமத்தில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமான தொழிலதிபர்
2013 ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில், தி எகனாமிஸ்ட் சைரஸ் மிஸ்ட்ரி அவர்களை இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளில் அவர் ஒரு மிக முக்கியமான தொழிலதிபராக கருதப்படுவதாக எழுதியிருந்தது.
The Empire That Cyrus Mistry Helped Build: 5 Points
The Empire That Cyrus Mistry Helped Build: 5 Points | முன்னாள் டாடா குழுமத்தின் தலைவர்.. சைரஸ் மிஸ்ட்ரி குறித்த சில அறியப்படாத தகவல்!