கர்நாடக மடாதிபதியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு| Dinamalar

சித்ரதுர்கா: கர்நாடக மடாதிபதியின் சிவ மூர்த்தியின் நீதிமன்ற காவலை செப்.,14 வரை நீட்டித்து சித்ரதுர்கா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள, முருகா மடத்தின் மடாதிபதி, சிவமூர்த்தி முருகா சரணரு, 64. முருகா மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிரிடம் பாலியலில் ஈடுபட்டதாக , கடந்த மாதம் ஆக., 27ல், மடாதிபதி மீது பாலியல் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, கடந்த 1ம் தேதி இரவு, மடாதிபதியை, போலீசார் கைது செய்தனர். வரும் 5ம் தேதி வரை நான்கு நாள் போலீஸ் காவலுக்கு, சித்ரதுர்கா மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்தார்.
இந்நிலையில், இன்று(செப்.,05) கர்நாடக மடாதிபதியின் சிவ மூர்த்தியின் நீதிமன்ற காவலை செப்.,14 வரை நீட்டித்து சித்ரதுர்கா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.