புதுடெல்லி: டெல்லி ரயில் நிலையம் மறுவடிவமைக்கப்பட்ட பிறகு எப்படி இருக்கும் என்பது பற்றிய படங்களை ரயில்வே அமைச்சகம் பகிர்ந்து கொண்டுள்ளது. இது, ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
நாட்டின் தலைநகரில் மிகவும்பரபரப்பான ரயில் நிலையமாக டெல்லி ரயில் நிலையம் உள்ளது. 16 நடைமேடைகள் கொண்ட இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே இந்த ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி ரயில் நிலையம் மறு வடிவமைக்கப்பட்ட பிறகு எப்படி இருக்கும் என்பது பற்றிய 2 படங்களை ட்விட்டரில் ரயில்வே அமைச்சகம் பகிர்ந்து கொண்டுள்ளது.
இரண்டு குவிமாடம் போன்றகட்டமைப்புடன் இதன் வடிவமைப்புஉள்ளது. கட்டிடங்களில் கண்ணாடிகள் அதிகம் பயன்படுத்தப்பட் டுள்ளன. ரயில் நிலையத்துக்கு செல்லவும் வெளியேறவும் சுற்றிலும் மேம்பாலங்களை இதில்காணமுடிகிறது. மேலும் பாதசாரி களுக்கான நடைமேம்பாலமும் இதில் உள்ளது. வெளியே பசுமைப் பகுதியும் புதிய வடிவமைப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் படங்கள் பகிரப்பட்ட சிலமணி நேரத்தில் 17 ஆயிரத்துக்கும்மேற்பட்ட லைக்குகளை பெற்றது.என்றாலும் ரயில் தாமதம், விபத்துகள் போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக வெளித் தோற்றங்களில் ரயில்வே மும்முரமாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித் துள்ளனர்.
இத்திட்டத்துக்கு அதிக நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்பதால் அதில் சவால்கள் உள்ளதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். கோடைக்காலத்தில் டெல்லியில் வெயில் கொளுத்தும் என்பதால் கண்ணாடிகள் பயன்பாட்டை சிலர் குறை கூறியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களை ரயில்வே அமைச்சகம் புறக்கணிப்பதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Marking a New Era: Proposed design of the to-be redeveloped New Delhi Railway Station (NDLS). pic.twitter.com/i2Fll1WG59
— Ministry of Railways (@RailMinIndia) September 3, 2022