இன்று முதல் தொலைபேசி சேவைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைபேசி சேவைக் கட்டணங்களையும், தொலைக்காட்சி சேவைக் கட்டணங்களையும் அதிகரிப்பதற்கு தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மொபைல், தரைவழிதரைவழி தொலைபேசி (லேண்ட்லைன்) மற்றும் புரோட்பேண்ட் (அகன்ற அலைவரிசை) கட்டணங்கள் மற்றும் ஏனைய முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளன.

மேலும், கட்டணம் செலுத்தி பார்வையிடும் தொலைக்காட்சி சேவைகளின் கட்டணத்தை இன்று முதல் 25 சதவீதம் உயர்த்தப்போவதாக தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தத்துடன் தொலைபேசி கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட பட்ஜெட் ஊடாக 12 சதவீதத்தில் இருந்த (VAT) வரி தற்போது 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விலை அதிகரிப்பு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு தமது நிறுவனங்களால் சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தொடர்பாடல் நிலையத்தின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.