சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக 2நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இபிஎஸ் தரப்பு கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லும், அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செலவம் தரப்புக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
இதையடுயடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.