ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், ரஷ்ய தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு ஆசிய நாடான, ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் அமைப்பின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைநகர் காபூலில், ரஷ்ய நாட்டின் தூதரகத்தின் நுழைவாயில் அருகே, பயங்கரவாதிகள் இன்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில், ரஷ்ய தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விசா பெற காத்திருந்த பொது மக்களும் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய தூதரகத்திற்கு தற்கொலைப் படை பயங்கரவாதி வருவதைக் கண்டறிந்த தாலிபான் பாதுகாப்பு படையினர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
Typhoon Hinnamnor: சுழன்றடிக்க காத்திருக்கும் ஹின்னம்னோர் புயல்: நாளை கரையை கடக்கிறது!
இந்த சம்பவத்திற்கு ரஷ்ய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, காபூலில் தூதரகத்தை தொடர்ந்து நடத்தி வரும் ஒரு சில நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.