பிரான்ஸ் பொண்ணு – சிவகங்கை மாப்பிள்ளை.. சிவகங்கையில் நடைபெற்ற டும் டும் டும்!!

காரைக்குடி அருகே இந்திய வம்சாவளி மணமகனுக்கும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் இனிதாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்கள் தங்கராசு – மாணிக்கவள்ளி தம்பதியினர். தங்கராசு பிரான்ஸ் நாட்டில் அம்பாசிடரில் பணிபுரிந்து வருவதால் தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டிலேயே வசித்து வருகிறார். இவரது மகன் கலைராஜன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் பிறந்த நிலையில் எட்டு வயதில் தனது குடும்பத்தாருடன் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
image
இந்நிலையில், அங்கு ரென் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தபோது, அதே கல்லூரியில் அறிவியல் பயின்ற மாணவி கயல் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவரும் தங்களது காதலை பெற்றோர்களிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர்,
image
இதையடுத்து இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மணமகன் பிறந்த ஊரில் தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று முடிவு செய்து, இன்று சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரில் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மணமக்கள் இருவரையும் மணமகனின் உறவினர்களும், பிரான்சிலிருந்து வந்திருந்த மணமகளின் உறவினர்களும், அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.