சென்னை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய ஈஷா அம்பானி இந்த வருடம் புதிதாக FMCG பிரிவில் புதிதாக வர்த்தகத்தைத் துவங்கவும், அதை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தார்.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சுமார் 200 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி நாடுகளின் மொத்த மக்களைத் தொகையைக் காட்டிலும் அதிகம்.
ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல FMCG பிரிவு வர்த்தகம் பெரிய அளவில் உதவும் முகேஷ் அம்பானி, ஈஷா அம்பானி நம்புகின்றனர்.
இதற்காகத் தமிழ்நாட்டு நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டு உள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
அமெரிக்க நிறுவனங்களை ஓடவிடப்போகும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி திட்டம் என்ன..?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது FMCG வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் புதிய பிராண்டுகளை உருவாக்காமல் ஏற்கனவே சந்தையில் இருக்கும் நிறுவனங்களை வாங்கி அதை விரிவாக்கம் செய்து விரைவாக வாடிக்கையாளர்களையும், வர்த்தகத்தையும் அடைய திட்டமிட்டு உள்ளது.
3 நிறுவனம்
இதற்காகக் கவின்கேர் குழுமத்தின் கார்டன் நம்கீன்ஸ், லஹோரி ஜீரா, பிந்து பீவரேஜஸ் ஆகிய பிராண்டுகளையும் அதன் வர்த்தகத்தையும் கைப்பற்றித் தனது FMCG வர்த்தகப் பிரிவில் இணைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான பிராண்டுகளையும், பொருட்களையும் விற்பனை செய்ய முடியும்.
லஹோரி குளிர்பானங்கள்
இதில் லஹோரி ஜீரா நிறுவனம் நம்பு, கச்சா ஆம், ஷிகன்ஜி போன்ற சுவைகளில் லஹோரி குளிர்பானங்களைத் தயாரிக்கிறது. இதேபோல் பிந்து பீவரேஜஸ் நிறுவனம் எஸ்ஜி கார்ப்ரேஷன்ஸ் நிறுவனத்தின் பெயரில் பிந்து மினரல் வாட்டர் பேக் செய்து விற்பனை செய்து வருகிறது.
கவின்கேர் குழுமம்
மேலும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கவின்கேர் குழுமத்திற்குச் சொந்தமான கார்டன் நம்கீன்ஸ் அதாவது முறுக்கு, மிக்சர் போன்ற தின்பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 2000 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்நிறுவனம் சுமார் 20க்கும் அதிகமான வகை ஸ்னாக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கைப்பற்றல் குறித்துக் கார்டன் நம்கீன்ஸ், லஹோரி ஜீரா, பிந்து பீவரேஜஸ் ஆகிய 3 நிறுவனங்களும் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரிலையன்ஸ் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஜெய்சூர்யாஸ் ரீடைல் கடையை மொத்தமாக வாங்கியுள்ளது.
campa cola பிராண்ட்
இதேபோல் சில நாடுகளுக்கு முன்பு ரிலையன்ஸ் இந்தியாவில் 1970களில் மற்றும் 1980களில் கொடி கட்டி பறந்த ஒரு முன்னணி கோலா பிராண்டாக இருந்த campa cola பிராண்டை சுமார் 22 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக அறிவித்தது. இந்தப் பிராண்டுகள் மூலம் பெரிய அளவிலான வர்த்தகத்தை FMCG பிரிவில் கட்டாயம் பிடிக்க முடியும்.
Reliance Industries buying CavinKare’s Garden namkeens with other 2 brands for FMCG business
Reliance Industries buying CavinKare’s Garden namkeens with other 2 brands for FMCG business தமிழ்நாட்டு நிறுவனத்தை வாங்கும் முகேஷ் அம்பானி..? மாஸ்டர் பிளான் தான்..!