`சிலிண்டர் ரூ.500-க்கு தருகிறோம்‘- குஜராத்தில் வாக்குறுதிகளால் அனல்பறந்த ராகுல் பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளின் ரூ.3 லட்சம் கடன் தொகையை தள்ளுபடி செய்வதாகவும், விவசாயிகளுக்கு ரூ.1,000 என்ற விலைத்தொகையை நீக்கி இலவச மின்சாரம் தருவதாகவும், எல்.பி.ஜி. சிலிண்டரை ரூ.500-க்கு தருவதாகவும் பேசியுள்ளார்.
குஜராத்தின் அகமதபாத்தில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற `பரிவர்தன் சங்கல்ப் ராலி’ என்ற பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது மக்களிடையே பேசிய அவர், குஜராத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பது குறித்து தேர்தல் வாக்குறுதிகள் வழங்கினார்.
image
அப்படி அவர் குறிப்பிட்ட சில வாக்குறுதிகளில், “10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 3,000 ஆங்கிலவழி கல்விநிலையங்கள் கட்டப்படும். பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும். விவசாயிகள் மீது நிலுவையிலுல்ள கடன் தொகையில், ரூ.3 லட்சம் வரை தள்ளூபடி செய்யப்படும். ரூ.500-க்கு எல்.பி.ஜி சிலிண்டர் வழங்கப்படும்” என்று பேசினார். மேலும், பாஜக அரசை நோக்கி “பாஜக அரசு, தொழிலதிபர்களின் கடன் தொகையையை தான் தள்ளுபடி செய்திருக்கிறது. விவசாயிகல் கடனை தள்ளுபடி செய்ததா?” என்று கேட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.