வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி: சட்டசபையில் நடந்த ,நம்பிக்கை வாக்கெடுப்பில், 48 பேரின் ஆதரவுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சுரங்க முறைகேடு புகார் எழுந்தது.
இதையடுத்து, அவரை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யும்படி, எதிர்க்கட்சியான பா.ஜ., தரப்பில் இருந்து தேர்தல் கமிஷனுக்கு மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான தங்கள் முடிவை, மாநில கவர்னரிடம் கடந்த மாதம் 25ல் தேர்தல் கமிஷன் அளித்தது.
இந்நிலையில், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முதல்வர் ஹேமந்த் சோரன் முடிவு செய்தார். இதையடுத்து எம்.எல்.ஏ.,க்கள் விலை போய்விடக் கூடாது என்பதற்காக, அனைவரையும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் தங்க வைத்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு:
இந்நிலையில், இன்று(செப்.,05) ஜார்க்கண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை, முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
வெற்றி:
பா.ஜ., எம்.ஏல்.ஏக்கள்., வெளிநடப்பு செய்த நிலையில், 81 பேர் கொண்ட சட்டசபையில் 48 பேரின் ஆதரவுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெ ற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement