டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமியை நியமனம் செய்து ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி வகித்து வருகிறார். அவருடைய பதவிகாலம் வரும் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போதையை தலைமை நீதிபதி முனீஸ்வரநாதர் பண்டாரி செப்.12ல் ஓய்வு பெறுவதால் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமியை நியமனம் செய்து ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள எம்.துரைசாமி நியமனம் வரும் 22ம் தேதி ஓய்வு பெறுகிறார். உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி, வரும் 13ம் தேதி முதல் 10 நாட்களுக்கு செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் முறைப்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம், உயர் நீதிமன்ற பதிவாளர் மூலமாக நீதிபதி துரைசாமி அலுவலகம், ஆளுநர் அலுவலகம், முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.