வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாக்பூர்: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு மத்திய அரசின் தொழிலக பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். எனப்படும் (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) என்ற அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அமைப்பிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கிட மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
இதையடுத்து மத்திய அரசின் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புபடை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடபடுத்தப்பட உள்ளனர். இதற்கான உத்தரவு கடந்த செப்.1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்கள் முழுவதுமாக விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து துணை கமிஷனர் அந்தஸ்திலான உயர்போலீஸ் அதிகாரி தலைமையிலான சி.ஐ.எஸ்.எப். படை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement