ரிலையன்ஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் திட்டம்.. மோர்கன் ஸ்டான்லி ஆய்வு..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குழுமத்தைப் போலவே தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அதிகப்படியான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.

அதானி குழுமத்தின் கடன் அளவு கடந்த 5 வருடத்தில் 1 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2.6 லட்சமாக உயர்ந்திருந்தாலும், மின்சாரம் முதல் எரிவாயு வரை, விமானநிலையம் முதல் சாலை திட்டம் வரை, மீடியா முதல் டிஜிட்டல் சேவை வரையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.

இதேபோன்ற விரிவாக்கத்தையும், வளர்ச்சியையும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது முதலீட்டாளர்களுக்கு அளிக்க முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.

மில்லியன் கடன்.. பாப்ஸ்டார் லேடிகாகா திவால் ஆனது ஆனாரா?

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்தியா மற்றும் ஆசியாவின் 2வது பெரிய பணக்காரர் ஆக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நான்காவது முதலீட்டு சுழற்சியை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் திட்டமிட்டு உள்ளார். இந்த 4வது முதலீட்டுச் சற்றில் சுமார் 50 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முகேஷ் அம்பானி முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்த 50 பில்லியன் டாலர் 4வது முதலீட்டுச் சுற்றில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருவாயை இரட்டிப்பாக்க உதவும் என்றும், 2027ல் இந்நிறுவனத்தின் லாபம் இரண்டு மடங்கு வளர்ச்சி அடையும் என மோர்கன் ஸ்டான்லி கணிக்கப்பட்டு உள்ளதால் பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான நம்பிக்கை உருவாகியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்
 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்று 1.60 சதவீதம் உயர்ந்து 2,570 ரூபாயாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 6.90 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் கடந்த 5 வருடத்தில் ரிலையன்ஸ் பங்குகள் 217.59 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

4வது முதலீட்டு சற்று

4வது முதலீட்டு சற்று

4வது முதலீட்டுச் சற்றில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அடுத்த மூன்று ஆண்டுகளில் கெமிக்கல், 5ஜி, ரீடைல் மற்றும் நியூ எனர்ஜி ஆகியவற்றில் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ்-ன் முதல் முதலீட்டு சுழற்சியானது 1990களின் பிற்பகுதியிலும் 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தைச் சார்ந்து இருந்தது.

2வது மற்றும் 3வது முதலீட்டு சுற்று

2வது மற்றும் 3வது முதலீட்டு சுற்று

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முதலீடு எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல் மேம்பாட்டை இலக்காகக் கொண்டது, மூன்றாவது தொலைத்தொடர்புக்குக் கவனம் செலுத்தியது. தற்போது 4வது சுற்றுக்காக 50 பில்லியன் டாலர் முதலீட்டை அடுத்த 3 ஆண்டுகளில் முதலீடு செய்ய உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance’s 4th investment cycle of $50 bn to double earnings Morgan Stanley

Reliance’s 4th investment cycle of $50 bn to double earnings Morgan Stanley ரிலையன்ஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் திட்டம்.. மோர்கன் ஸ்டான்லி ஆய்வு..!

Story first published: Monday, September 5, 2022, 20:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.