உக்ரேனிய அகதிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானிய மில்லியனர்


ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்தே உக்ரேனிய அகதிகளை இங்கிலாந்துக்கு அழைத்து வர ஆதரவு

உக்ரேனிய பெண்மணியை மீட்டுவர, பிரதமர் போரிஸ் ஜோன்சனை தொடர்பு கொண்டு கடும் அழுத்தம்

பிரித்தானியாவில் உக்ரேனிய அகதி ஒருவருக்கு தங்கள் குடியிருப்பில் அடைக்கலம் அளித்த மில்லியனர் ஒருவர் தற்போது மனைவியை கைவிட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் Wonga என்ற நிறுவனத்தின் முன்னாள் தலைவரான 52 வயது Haakon Overli என்பவரே உக்ரைன் அகதியுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக மனைவியை கைவிட்டவர்.

சில வாரங்கள் முன்பு, குறித்த உக்ரேனிய பெண்மணியை பிரித்தானியாவுக்கு மீட்டுவரும் பொருட்டு, பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் உள்விவகார அமைச்சர் பிரிதி பட்டேலை தொடர்பு கொண்டு கடும் அழுத்தம் அளித்து வந்துள்ளார்.

உக்ரேனிய அகதிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானிய மில்லியனர் | Millionaire Leaves Wife For Ukrainian Refugee

@Jo St Mart

தற்போது அந்த உக்ரேனிய அழகிக்காக மனைவியை கைவிட்டு, அவருடன் புதிய குடியிருப்பில் குடியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, மார்ச் மாதம் தொடங்கி ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்தே உக்ரேனிய அகதிகளை இங்கிலாந்துக்கு அழைத்து வருவதற்கு ஆதரவாக அவர் பலமுறை ட்வீட் செய்திருந்தார்.

நோர்வேயில் பிறந்த Haakon Overli 1997ல் இணையமூடாக Wonga என்ற நிறுவனம் ஒன்றை நிறுவி, அந்த நிறுவனத்தை 2000 ஆம் ஆண்டு 900 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனை செய்தார்.

Wonga நிறுவனம் சரிவடைந்த நிலையில் அதன் வாடிக்கையாளர்களில் 200,000 பேர்களுக்கு சுமார் 400 மில்லியன் பவுண்டுகள் திருப்பித் தரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.