விமான நிறுவனங்கள் போட்டா போட்டியில் கட்டணம் குறைப்பு.. மகிழ்ச்சியில் பயணிகள்!

கொரோனா தொற்று காலத்தில் உள்நாட்டு விமான பயணத்துக்கு விதிக்கப்பட்ட கட்டண வரம்புகளை ஆகஸ்ட் 31-ம் தேதி ஒன்றிய அரசு நீக்கியது.

அதனைத் தொடர்ந்து விமான நிறுவனங்கள் தங்களது கட்டணங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அதை உறுதி செய்யும் விதமாக விமான நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தங்களது கட்டணங்களைக் குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

டெக் துறை மட்டுமல்ல..இனி இதிலும் கர்நாடகா தான் பெஸ்ட்.. பில்லியன் முதலீடு.. 60,000 பேருக்கு வேலை

ஆகாசா ஏர்

ஆகாசா ஏர்

ஆகாசா ஏர் விமான நிறுவனம் ஆகஸ்ட் மாதம் மும்பை -பெங்களூருவுக்கு 3,948 ரூபாய் கட்டணம் வசூலித்து வந்தது. இப்போது அந்த கட்டணத்தை 2000-2200 ரூபாய் என குறைத்துள்ளது. மும்பை – அகமதாபாத் செல்ல 1,400 ரூபாய் கட்டணம் என தெரிவித்துள்ளது.

இண்டிகோ & கோ ஃபர்ஸ்ட்

இண்டிகோ & கோ ஃபர்ஸ்ட்

இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ ஆகாசா ஏர் விமான நிறுவனத்துக்கு இணையான கட்டணத்தையே நிர்ணயித்துள்ளது. கோ ஃபர்ஸ்ட் நிறுவனமும் விரைவில் கட்டணத்தைக் குறைக்க உள்ளது.

டெல்லி - லக்னோ
 

டெல்லி – லக்னோ

டெல்லி – லக்னோ வழித்தடத்தில் 4000 ரூபாயாக இருந்த விமான கட்டணத்தை 1900- 2200 ரூபாயாக ஏர் ஏசியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களைக் குறைத்துள்ளன. கொச்சி – பெங்களூரு வழித்தடங்களில் 1,100 – 1,300 என கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மும்பை – ஜெய்ப்பூர் வழித்தடத்தில் 5000 ரூபாயாக இருந்த கட்டணம் 3,900 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

 ஏன் குறைப்பு?

ஏன் குறைப்பு?

குறைந்த விலையில் விமான பயணிகள் சந்தையைப் பிடிக்க மட்டும் இந்தக் கட்டணக் குறைப்பு கிடையாது. டிமாண்ட், போட்டி, வருவாய் இழப்பைச் சரி செய்ய என பல்வேறு விஷயங்களுக்காகத் தான் இந்த கட்டணம் குறைப்பை விமான நிறுவனங்கள் செய்கின்றன என கூறப்படுகிறது.

ஆப் சீசன்

ஆப் சீசன்

ஜூலை – செப்டம்பர் மாதம் ஆப் சீசன் என்பதால் விமான பயணிகள் வரத்து குறைவாக இருக்கும். எனவே இந்த சமயத்தில் கட்டணச் சலுகைகளை வழங்குவதன் மூலம் ரயில் பயணிகளை ஈர்க்க முடியும் என விமான நிறுவனங்கள் கட்டணக் குறைப்பை அறிவித்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

விமான எரிபொருள் கட்டணம்

விமான எரிபொருள் கட்டணம்

சென்ற வாரம் விமான எரிபொருள் கட்டணம் கடந்த 2 ஆண்டுகள் இலாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏவியேஷன் டர்பைன் எரிபொருளுக்கான (ஏடிஎஃப்) புதிய விலை நிர்ணய முறையைத் தொழில்துறை எதிர்பார்த்து வருவதாக விமான அதிகாரி கூறினார். மேலும் விமான எரிபொருள் புதிய விலை நிர்ணய முறை விமான நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, விமான டிக்கெட் விலையை குறைக்கவும் பயன்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் விமான எரிபொருள் கட்டணம் மிகவும் அதிகம். விமான நிறுவனங்களின் செலவுகளில் 50%-க்கும் மேலாக எரிபொருள் செலவே உள்ளது எனவும் கூறப்படுகிறது. எது எப்படியோ, விமான கட்டணம் குறைந்தால் அது பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் தானே..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

After Government Lifts Air Fare Caps, Price War Started Between Flight Operators

After Government Lifts Air Fare Caps, Price War Started Between Flight Operators | விமான நிறுவனங்கள் போட்டா போட்டியில் கட்டணம் குறைப்பு.. மகிழ்ச்சியில் பயணிகள்!

Story first published: Tuesday, September 6, 2022, 9:38 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.