ஜிம்பாப்வேயில் தட்டம்மை: 700 குழந்தைகள் உயிரிழப்பு| Dinamalar

ஹராரே : ஜிம்பாப்வே நாட்டில் தட்டம்மை நோய்க்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது.

தென் ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தட்டம்மை நோயால் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதுவரை 6,291 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 698 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளுக்கு தட்டம்மைக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஏராளமானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஜிம்பாப்வே நாட்டில் நவீன மருத்துவத்துக்கு மத பழமைவாதிகள் தடை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏராளமானோர் முன்வரவில்லை.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.