வீட்டுப்பாடம் செய்யாததால் இரண்டு சிறுமிகளை அடித்து காயப்படுத்தியதாக டியூஷன் நடத்தும் ஆசிரியரை டெல்லி போலீஸ் கைது செய்திருக்கிறது.
டெல்லியின் முகுந்த்புர் பகுதியில் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வருகிறார் குல்தீப் என்ற நபர். இவரிடம் டியூஷனுக்கு செல்லும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் உடலில் காயம் இருந்ததை கண்ட அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான பேசியுள்ள மூத்த காவல்துறை அதிகாரி, “கடந்த புதன் கிழமையன்று சிறுமிகள் இருவரும் டியூஷன் முடிந்து வீட்டுக்கு வந்தபோது, இருவரது உடம்பிலும் காயம் இருந்ததை பெற்றோர் கண்டிருக்கிறார்கள்.
அப்போது குல்தீப் அந்த சிறுமிகள் இருவரையும் அடித்து கொடுமைப்படுத்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதும் குல்தீப் மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
नन्हीं सी 8 साल और 6 साल की बच्चीयों को उनकी ट्यूशन टीचर ने होमवर्क ना करने पर बच्चियों को कमरे में बंद कर बेरहमी से मारा पीटा। बच्चियों के शरीर पर लगे ज़ख्म के निशान दहला देने वाले हैं। दिल्ली पुलिस को नोटिस जारी कर रही हूं। ये टीचर गिरफ्तार होनी चाहिए। pic.twitter.com/5rAq4fSDym
— Swati Maliwal (@SwatiJaiHind) September 2, 2022
இதனிடையே, டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவரான ஸ்வாதி மலிவாலில் ட்விட்டர் பதிவில், “வீட்டுப்பாடம் செய்யாததற்காக 6 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகளையும் அறை ஒன்றில் வைத்து கொடுமையாக தாக்கியிருக்கிறார் அந்த டியூஷன் டீச்சர்.
குழந்தைகளின் உடலில் உள்ள காயத்தை பார்த்தால் மனம் பதறுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன். அந்த ஆசிரியர் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இப்படி இருக்கையில், விசாரணையின்போது பேசியுள்ள அந்த சிறுமிகள், “வீட்டுப்பாடம் முடிக்காததால் குல்தீப் தங்களை அறையில் பிடித்து தள்ளி, பிளாஸ்டிக் பைப்பால் அடித்தார்” எனக் கூறியிருக்கிறார். அதன் பிறகு அந்த குழந்தைகள் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM