திருமலை: இந்து கோயில்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது என நடிகை அர்ச்சனா கூறியுள்ளார். மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் தேவஸ்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் பிரமுகரும், நடிகையுமான அர்ச்சனா கூறினார். சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் கேட்ட தன்னிடம் ஊழியர்கள் தகாத முறையில் நடந்துகொண்டதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.