22 ஆவது திருத்த மூலத்தில், சில சரத்துக்கள் அரசியல் யாப்புக்கு  முரண்பாடு

உத்தேச 22 ஆவது  திருத்த மூலத்தில் ,சில சரத்துக்கள் அரசியல் யாப்புக்கு முரண்பாடானது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்த சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும், பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்புடன் இதனை நிறைவேற்ற முடியும் என்று உயர் நீதிமன்றம் அர்த்தப்படுத்தி இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.