பெங்களூரில் பெய்து வரும் கன மழை காரணமாகச் சில நாட்களிலேயே மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. வீடு, அலுவலகம், கடைகள், பள்ளிகள் என அனைத்து முக்கியமான இடங்களிலும் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
பெங்களூர் மழை வெள்ளம் காரணமாகச் சில நாட்களிலேயே பல நூறு கோடி அளவிலான இழப்பு ஏற்பட்டு உள்ளதாகக் கணிக்கப்படும் நிலையில் இணையத்தில் வழக்கம் போல் நம்ம நெட்டிசன்ஸ் மீம்ஸ் வீடியோக்களைத் தெறிக்க விடுகின்றனர்.
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்று கேட்க தோன்றினாலும் இந்த மீம்ஸ் சில சீரியஸ் ஆன விஷயங்களையும் கூறுகிறது.
பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு மீண்டும் WFH.. மழை வெள்ளத்தில் மூழ்கிய அலுவலகங்கள்..!
அவுட்டர் ரிங் ரோடு
பெங்களூரில் 500க்கும் மேற்பட்ட டெக் நிறுவனங்கள் இருக்கும் இடம் தான் அவுட்டர் ரிங் ரோடு. இப்பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் மக்கள் பயந்து பயந்து சாலையைக் கடக்கும் வீடியோ-வை பாருங்க.
விப்ரோ
இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ-வின் முக்கிய அலுவலகமாகச் சர்ஜாபுரா சாலையில் அமைந்துள்ள அலுவலகத்தின் நிலை பாருங்க. பெரும்பாலான ஐடி நிறுவனங்களின் நிலை இதுதான்.
சர்ஜாபுரா சாலை
விப்ரோ உட்படப் பல முக்கிய ஐடி நிறுவனங்களும் பெரிய பெரிய குடியிருப்புகள் அமைந்திருக்கும் சர்ஜாபுரா சாலையின் நிலையைப் பாருங்க.
லிப்ட்
மழை வெள்ளத்தால் குடியிருப்பு மற்றும் அலுவலகம் என எந்த வித்தியாசமும் இல்லாமல் மழை நீர் புகுந்துள்ளது.
BLUNDER-LA
எங்களிடம் புதிய வாட்டர் தீம் பார்க் உள்ளது, பெயர் ‘BLUNDER-LA’ இது BBMP ஆல் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது, மேலும் 40% கமிஷன் CM பசவராத் பொம்மை மற்றும் 17 ஆண்டுகள் எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி.
இந்தப் போட்டவில் இடம்பெற்று இருப்பது அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் அமைந்திருக்கும் Ecospace என்னும் ஐடி நிறுவனங்களின் கேம்பஸ். மேலும் இதுபோன்ற வாட்டர் தீம் பார்க் மைசூர் ரோடு மற்றும் வொயிட்பீல்டு ஆகிய பகுதிகளிலும் உள்ளதாகப் புகைப்படத்தில் போடப்பட்டு உள்ளது.
இன்னோவேஷன் ஹப்
பெங்களூரை இன்னோவேஷன் ஹப் என்று அழைக்கக் காரணம் இருக்கு.. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை JCB மூலம் அழைத்துச் செல்லும் வீடியோ.
விமான நிலையம்
இந்தியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக விளங்கும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் நிலை இதுதான்.
பெங்களூர் நிலை இதுதான்..
பெங்களூரில் கோரமங்களா, HSR தத்தளித்து வரும் வேளையில், சர்ஜாபுரா மூழ்கி வருகிறது. அட இங்க இருந்த பெலந்தூர் எங்கப்பா..?
Work from Bridge.
நம் ஊரு ஐடி ஊழியர்களின் அலும்புக்கு ஒரு அளவே இல்லை. சாலை முழுவதும் மழை வெள்ளம், ஆனாலும் பிரிட்ஜ் மீது அமர்ந்து வேலை பார்க்கிறார் ஒரு பெண் ஐடி ஊழியர்.
மாரத்தஹள்ளி
தீபா நர்சிங் ஹோம் அருகே உள்ள மாரத்தஹள்ளியில் வசிக்கும் பலர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பல நாட்களாகப் போராடி வருகின்றனர், இங்கு 3 நாட்களாக மின்சாரம் இல்லை. நீர்மட்டம் குறையவில்லை. சில குடும்பங்கள் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்கின்றன.
வெனிஸ்
பெங்களூர் எப்போது வெனிஸ் நகரமாக மாறியது
Bangalore Rain memes trending on social media; But pain of bengaluru people is huge
Bangalore Rain memes trending on social media; But pain of bengaluru people is huge இங்க இருந்த ஐடி கம்பெனி எங்கடா.. வெள்ளத்திலும் தெறிக்க விடும் மீம்ஸ்..!