கார் எல்லாம் வராது.. டிராக்டர் தான் வரும்.. பெங்களூர் ஐடி ஊழியர்கள் ஷாக்..!

பெங்களூரில் மழை வெள்ளம் பிரச்சனை பல முக்கியமான இடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்தச் சூழ்நிலையில் பல அலுவலகங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரில் பல அலுவலகங்களில் கிரவுண்ட் ஃப்ளோரில் இருக்கும் லிப்ட் வரையில் மழை நீர் புகுந்துள்ளது, இதேபோல் பல குடியிருப்புப் பகுதியில் முழங்கால் வரையில் தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது பெங்களூர் மக்கள் கார், பஸ்களைக் காட்டிலும் டிராக்டரில்-தான் அதிகமாகப் பயணித்து வருகின்றனர்.

பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு மீண்டும் WFH.. மழை வெள்ளத்தில் மூழ்கிய அலுவலகங்கள்..!

புதிய வாகனம்

புதிய வாகனம்

நீரஜ் என்பவர் பெங்களூர் மழைக்காலத்தில் பயணிக்கப் புதிய வாகனத்தைப் புக் செய்துள்ளேன் என டிராக்டர் புகைப்படத்தைப் பதிவிட்டு உள்ளார்.

ஸ்டார்ட்அப் ஐடியா

மழைக்காலத்தில் பெங்களூரில் டிராக்டர்/JCB சேவைகளை அளிக்கலாம் என உபர் யோசித்துக் கொண்டு இருக்கும் வேளையில் துவங்கப்பட்டு உள்ளது.

சிஇஓ

கட்டுமானம் மற்றும் மறுவடிவமைப்புத் தொழிலுக்கான ஸ்டார்ட்-அப் நிறுவனமான Homergize Technologies Pvt. Ltd. நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் கௌஷிக், யமலூரில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் டிராக்டரில் மீட்கப்பட்டார்.

ஓலா, உபர்
 

ஓலா, உபர்

Ola மற்றும் Uber ஆகியவை #பெங்களூருவில் டிராக்டர் சவாரிகளை அறிமுகப்படுத்த வேண்டும்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

பெங்களூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்க ஏராளமான டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டிராக்டர் சேவைகளுக்கு 18% GST விதிக்க உங்கள் அமைச்சகத்திற்கு ஒரு வாய்ப்பு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-ஐ டேக் செய்துள்ளார்

வீடுகள்

பெங்களூரில் பெரும்பாலான கேட்டெட் கம்யூனிடி அனைத்தும் தற்போது டிராக்டர் கம்யூனிடி-யாக மாறியுள்ளது.

யமலூர்

யமலூர்

ஆடம்பர வீடுகளும், பணக்காரர்களும் குவிந்திருக்கும் யமலூர் பகுதியில் மக்களைக் காப்பற்ற டிராக்டர் மட்டுமே பயன்படுத்த முடியும் நிலை உருவாகியுள்ளது

பள்ளி

திடீர் மழை காரணமாக மாணவர்கள் டிராக்டரில் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

பெங்களூர் ஐடி ஊழியர்கள்

பெங்களூர் ஐடி ஊழியர்கள்

பெங்களூரில் தொடர் மழை காரணமாக பெரும்பாலன இடத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கும் வேளையில் ஐடி ஊழியர்கள் வீட்டுக்கு செல்ல 50 கட்டணத்தில் டிராக்டரில் அழைத்து செல்லப்படுகின்றனர்.

இது ஓலா, உபர் நிறுவனங்களுக்கே வராத ஐடியாவாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

#BengaluruRains: Tractor became important transport flood affected areas across bangalore

#BengaluruRains: Tractor became important transport flood affected areas across bangalore பெங்களூர் மழை: கார் எல்லாம் வேஸ்ட் பாஸ், டிராக்டர் தான் பெஸ்ட்.. ஓலா, உபர் ஷாக்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.