ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென இந்திய முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு எல்லைப் பாதுகாப்பு படையினர் சரமாரி பதிலடி கொடுத்ததால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் யுத்தம் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 2003-ம் ஆண்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இந்த ஒப்பந்தம் இருதரப்பினராலும் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுப்பிக்கப்பட்டது.
” />பாகிஸ்தானை இந்தியா புரட்டியெடுத்த பொன் விழா ஆண்டு இது… !
யுத்த நிறுத்தம்
இத்தகைய யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருப்பதால் எல்லையோர கிராம மக்கள் தங்களது இயல்புவாழ்க்கையை சுமூகமாக வாழ முடிகிறது. எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் தங்களது விவசாய பணிகளை இடையூறும் அச்சமும் இல்லாமல் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று பாகிஸ்தான் தமது சீண்டும் வேலையை காட்டியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதியான ஆர்னியா செக்டாரில் இன்று காலையில் எல்லை பாதுகாப்புப் படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாக். திடீர் தாக்குதல்
அப்போது எல்லைப் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து நமது எல்லை பாதுகாப்பு படையினரும் பதிலடியாக சரமாரியாக திருப்பிச் சுட்டனர். இருதரப்புக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்றது. இதனால் ஆர்னியா எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
பாதிப்பு இல்லை
இச்சம்பவம் தொடர்பாக எல்லை பாதுகாப்பு படை டிஐஜி சாந்து கூறுகையில், எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட வீரர்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு நமது தரப்பில் பதிலடி தரப்பட்டது. நமது தரப்பில் எந்வித பாதிப்பும் இல்லை என்றார்.
அந்த யுத்தம் தொடங்கிய நாள்
பாகிஸ்தான் நாடு இன்று பாதுகாப்பு தினத்தை கொண்டாடி வருகிறது. பாகிஸ்தானின் 57-வது பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பங்கேற்றார். 1965-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையேயான யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தம் அதிதீவிரமாக தொடங்கிய நாள். இந்த நாளில்தான் பாகிஸ்தானின் லாகூர் நகரை நெருங்கி நின்றது இந்திய படைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.