கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாதூர் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக ஆட்டோவில் சென்றுவிட்டு வீடு திரும்பினர். இந்த ஆட்டோவை அப்பு என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது தனியார் திருமண மண்டபம் எதிரி வந்த ஆட்டோ, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து உருண்டோடியது. அப்போது அதே திசையில் வந்த இருசக்கர வாகனம் அந்த ஆட்டோ மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டும், ஆட்டோவில் வந்தவர்கள் சாலையில் சிதறி கீழே விழுந்தனர்.
பின்னர் அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு அவ்வழியாக வந்த ஆட்டோ மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தேசிய நெடுஞ்சாலை சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ திடீரென சாலையில் தலைகீழாக கவிழ்ந்து உருண்டோடிய ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டது சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாலையில் உருண்டோடிய ஆட்டோவில் இருந்து பயணிகள் சிதறி விழுவதை கீழே உள்ள வீடியோவில் காணலாம்:
தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் கூட டதிர்ச்சியை கொடுப்பதாகவே உள்ளது. சாலை பாதுகாப்பில் அரசு மட்டுமல்லாது பொதுமக்களும் அதிக வனம் செலுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக உள்ளது.
சில நாட்களுக்கு முன் வைரலாகிய ஒரு வீடியோவில் கூட சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஷா மீது வேகமாக வந்த கார் மோதிய சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. itஇரு வாகனங்களுக்கு இடையில் சிக்கிய ஒரு பெண் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் கணக்கி பகிர்ந்திருதார்.
வீடியோவைப் பார்த்த பெரும்பாலானோர் அதிர்ச்சி வெளியிட்டதோடு, சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் பொறுப்பாக நடந்து கொள்ளாவிட்டால், இதுபோன்ற சம்பவம் யாருக்கும் ஏற்படலாம் என்று கூறினார்.