அமெரிக்க நிறுவனத்தை அலேக்கா தூக்கும் முகேஷ் அம்பானி.. கடைக்குட்டி சிங்கத்துக்கு ஜாக்பாட்!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய மிகவும் தீவிரமாக உள்ளது.

இந்த நிலையில் விரிவாக்கத்தை வேகப்படுத்தும் அதேவேளையில் சேவைகளை வேகப்படுத்தவும் பல நிறுவனங்களை வாங்கி வருகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அந்த வகையில் ரிலையன்ஸ் தனது 4வது முதலீட்டுச் சுற்றில் நியூ எனர்ஜி பிரிவு மூலம் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த முடிவு செய்துள்ளது.

இதன் வாயிலாகக் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை வாங்கத் திட்டமிட்டு வருகிறது.

ரிலையன்ஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் திட்டம்.. மோர்கன் ஸ்டான்லி ஆய்வு..!

ரிலையைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் SenseHawk Inc என்னும் அமெரிக்க நிறுவனத்துடன் முதலீடு மற்றும் பங்கு கைப்பற்றல் அடங்கிய திட்டத்தின் அடிப்படையில் 79.4 சதவீத பங்குகளைச் சுமார் 32 மில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

SenseHawk நிறுவனம்

SenseHawk நிறுவனம்

SenseHawk நிறுவனம் 2018 ஆம் ஆண்டுக் கலிபோர்னியாவில் துவங்கப்பட்டுச் சோலார் எனர்ஜி உற்பத்தி துறையில் மென்பொருள் நிர்வாகச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவன சேவை மூலம் சோலார் திட்டங்களைத் திட்டமிடலில் இருந்து உற்பத்தி வரையில் தனது ஆட்டோமேஷன் சேவைகளைப் பயன்படுத்தி ஸ்ரிட்ம்லைன் செய்ய உதவுகிறது.

சோலார் அசர்ட் லைப்சைக்கிள்
 

சோலார் அசர்ட் லைப்சைக்கிள்

சோலார் அசர்ட் லைப்சைக்கிள்-ஐ மொத்தமாக நிர்வாகம் செய்ய டிஜிட்டல் தளத்தை உருவாக்கியுள்ளது. SenseHawk நிறுவனம் FY 2022-ல் $2,326,369, FY 2021-ல் $1,165,926 மற்றும் FY 2020-ல் $1,292,063 விற்றுமுதல் கொண்டு உள்ளது.

நான்காவது முதலீட்டுச் சுழற்சி

நான்காவது முதலீட்டுச் சுழற்சி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் நான்காவது முதலீட்டு சுழற்சியை முகேஷ் அம்பானி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் திட்டமிட்டு உள்ளார். இந்த 4வது முதலீட்டுச் சற்றில் சுமார் 50 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முகேஷ் அம்பானி முதலீடு செய்ய உள்ளதாகத் திட்டமிட்டு உள்ளார்.

நியூ எனர்ஜி துறை

நியூ எனர்ஜி துறை

இந்த 4வது முதலீட்டுச் சற்றில் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் அடுத்த மூன்று ஆண்டுகளில் கெமிக்கல், 5ஜி, ரீடைல் மற்றும் நியூ எனர்ஜி ஆகியவற்றில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் SenseHawk நிறுவனம் நியூ எனர்ஜி பிரிவில் வருகிறது, இதை முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி நிர்வாகம் செய்து வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance Industries buying 79.4 percent stake in USA based SenseHawk for 32 million USD

Reliance Industries buying 79.4 percent stake in USA based SenseHawk for 32 million USD. USA based SenseHawk is a software company providing solar digital platform. SenseHawk will play big role in Reliance Industries New energy business which handles by anant ambani.

Story first published: Tuesday, September 6, 2022, 17:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.