இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,417 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4 ஆயிரத்து 417 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 44 இலட்சத்து 66 ஆயிரத்து 862 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 32 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 38 இலட்சத்து 86 ஆயிரத்து 496 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 52 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.