அமெரிக்காவிற்கு வெளியே பெப்சி நிறுவன குளிர்பானங்களின் இரண்டாவது பெரிய பாட்டில் உற்பத்தி நிறுவனமான வருண் பீவரேஜஸ் விரைவில் தனது புதிய பாட்டில் தொழிற்சாலையை உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைக்க உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதிக்கு அருகில் இருக்கும் நைனி-யில் உள்ள சரஸ்வதி ஹைடெக் சிட்டி-யில் இப்புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி மேம்பாடு, என்ஆர்ஐ மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நந்த கோபால் குப்தா தெரிவித்தார்.
பிரயாக்ராஜ் பகுதியில் இருக்கும் நைனி தொழில்துறை பகுதியைப் புதுப்பிக்கவும், மேம்படுத்தவும் அம்மாநில அரசு எடுத்து வரும் முயற்சிகளின் விளைவாக இப்புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.
நரேன் கார்த்திகேயன் நிறுவன பங்குகளை வாங்கிய TVS.. எத்தனை கோடி தெரியுமா?
பெப்சி நிறுவனம்
ஆப்பிள் நிறுவனத்தைப் போலவே பெப்சி நிறுவனமும் தனது தயாரிப்புகள் பெரும்பாலானவற்றைக் கூட்டணி நிறுவனங்கள் வாயிலாகச் செய்கிறது, இதன் அடிப்படையில் பெப்சி-யின் பாட்டிலிங் கூட்டணி நிறுவனமான வருண் பீவரேஜஸ் உத்தரப் பிரதேசத்தில் சரஸ்வதி ஹைடெக் சிட்டி-யில் சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்து, 3,000 பேருக்கு நேரடியாக வேலை வழங்க உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம்
சரஸ்வதி ஹைடெக் சிட்டி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொழில்துறை, குடியிருப்பு மற்றும் வணிகத் துறைக்கான இடங்களைத் தனித்தனியாகப் பிரித்து நைனி பகுதியில் மாதிரி தொழில்துறை நகரமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
வருண் பீவரேஜஸ்
வருண் பீவரேஜஸ் நிறுவனத்துக்கு (பெப்சி நிறுவனம்) விரைவில் இட ஒதுக்கீடு கடிதம் வழங்கப்படும் என்றும், ஒதுக்கீடு கடிதம் கிடைத்ததும், அடிக்கல் நாட்டு விழா நடத்தி ஆலை அமைக்கும் பணியை நிறுவனம் தொடங்கும் என்றும் உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் நந்த கோபால் குப்தா கூறினார்.
ரூ.80,224 கோடி முதலீடு
உத்தரப் பிரதேசத்தில் தொழில் முதலீடுகளை விரைவுபடுத்தும் வகையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில், ஜூன் 3ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், நாட்டின் முன்னணி தொழில்முனைவோர் கலந்து கொள்ளும் அடிக்கல் நாட்டு விழா-3-ஐ ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில் ரூ.80,224 கோடி முதலீட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
ரூ.2,000 கோடி முதலீடு
அடிக்கல் நாட்டு விழாவிலேயே உத்தரப் பிரதேசத்தில் வருண் பீவரேஜஸ் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், வருண் பீவரேஜஸ் நிறுவனம் ரூ.496.57 கோடி முதலீட்டில் சித்ரகூட் மாவட்டத்தில் பர்கர் பகுதியில் மற்றொரு ஆலை அமைக்க விண்ணப்பித்தது.
உத்தரப் பிரதேச மாநில தொழில் வளர்ச்சி ஆணையம்
இத்திட்டத்தின் மீது விரைவான நடவடிக்கை எடுத்த உத்தரப் பிரதேச மாநில தொழில் வளர்ச்சி ஆணையம் (UPSIDA) இன் பிரயாக்ராஜ் மண்டல அலுவலகம் வருண் பீவரேஜஸ் நிறுவனத்திற்குச் சித்ரகூட் மாவட்டத்தில் பர்கர் பகுதியில் 68.73 ஏக்கர் நிலத்தை 15 நாட்களுக்குள் ஒதுக்கியது.
1200 வேலைவாய்ப்பு
சித்ரகூடில் உள்ள பார்கரில் பகுதியில் அமைக்கப்படும் பெப்சிகோ-வின் ஆலை நிறுவப்பட்டதன் மூலம், 1200-க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புப் பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Varun Beverages invest 1000 crore in UP Prayagraj for new plant will create 3000 jobs
Varun Beverages a bottling partner of PepsiCo’s beverages will soon set up its plant in Saraswati Hi-Tech City in Naini in Prayagraj. Varun Beverages will invest around Rs 1,000 crore it will generate 3,000 jobs