டெல்லியில் காவல் துறையினரால் ரூ.1,200 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள்கள் போதை ஏற்றிக்கொள்வதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் அதற்கு அடிமையானவர்களால் உட்கொள்ளப்படுகின்றன. போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும். இதனால் தனிமனிதன் , சமுதாயம் என பல வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது.
டெல்லியில் போதைப்பொருள் குற்றங்களை கண்காணிக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருவரை சோதனை செய்தனர். அவர்களை விசாரித்தபோது இருவரும் ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மெத்தாபெட்டமைன் மற்றும் ஹெராயின் போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 312 கிலோ மெத்தாபெட்டாமைன் மற்றும் 10 கிலோ ஹெராயின் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். சர்வ தேச சந்தையில் இதன் மதிப்பு ரூ. 1200 கோடியாகும். ஒரு கிராமின் மதிப்பு ரூ.30,000 என்கிறது போலிஸ் வட்டாரம்.
இதில் மெத்தாபெட்டமைன் மிகவும் ஆற்றல் வாய்ந்ததால் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி நரம்பு அமைப்பிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி அந்த நபரை அடிமையாக்குகின்றது. இது ஆம்படமைன் என கூறப்படும் போதைப்பொருளுக்கு இணையானது என போலீசார் கூறுகின்றனர். இந்த மருந்து ஏ.டி.எச்.டி. என அழைக்கப்படும் மூளையில் ஏற்படும் ஒரு குறைபாட்டை தீர்க்க இது மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு வகையான தூக்க குறைபாடு ஏற்படுத்தும் போதைப்பொருளாகும். இவ்வுளவு அதிகமான அளவில் போதைபொருள் பிடிபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.