செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சிலவாட்டம் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் ஆண் மற்றும் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மதுராந்தகம் போலீசார் சிலாவட்டம் கிராமத்திற்கு சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்த ஆண் மற்றும் பெண் பிரேதங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தற்கொலை செய்து கொண்டவர்கள் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னி குண்டு கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான அருள்ஜோதி மற்றும் மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான முத்துலட்சுமி என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதும் கடந்த 4 தேதி இருவரும் காணாமல் போனவர்கள் என்ற விபரம் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
மேலும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்துலட்சுமியின் கணவருக்கு அருள்ஜோதி பெரியப்பா மகன் ஆவார். அருள் ஜோதி சிறிய பையன் என்பதால் அருகில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு அடிக்கடி சென்றதால் அருள்ஜோதிக்கும் முத்துலட்சுமிக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த தகவல் இரு குடும்பத்தாருக்கும் தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையிலிருந்து, காணாமல் போன இருவரும் மதுராந்தகத்தில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.