அரசு நடப்பதே ITகட்டும் 4% மக்களால்தான்:நீதிபதி-ஸ்டாலின் மாற்றம் ஏன்-நிதிஷ் விளக்கம்|விகடன் ஹைலைட்ஸ்

“அரசு நடப்பதே வருமான வரி கட்டும் 4% மக்களால்தான்!”- உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்தால் சர்ச்சை!

வருமான வரி

‘அரசு நிர்வாகம் நடப்பது வருமான வரிக் கட்டும் 4 சதவீத மக்களால் மட்டுமே’ என்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கருத்து சர்ச்சையைக் கிளப்பி உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவரது கருத்துக்கு எதிராக கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

நீதிபதி அவ்வாறு சொன்னது ஏன்?

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா அடங்கியோர் அமர்வு விசாரித்து வருகிறது.

மனு மீதான விசாரணையின்போது நீதிபதி ஹேமந்த் குப்தா, ” ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு ஆடை விதி உள்ளது. உதாரணமாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் அணிந்து வர தடை உள்ளது. அதேபோன்று கோல்ஃப் மைதானத்திற்கென்று சில ஆடை விதிகள் உள்ளன…” என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்து வாதிட்ட வழக்கறிஞர் ஹெக்டே, ” இந்த ஒப்பீடு இதற்குப் பொருந்தாது. எல்லாமே சூழலுக்கு ஏற்ப வருகிறது. இன்று அரசு கல்லூரியில் கல்வி கற்கும் சூழல் உள்ளது. அரசு என்பது அனைவரின் நிதி பங்களிப்பிலும் நடத்தப்படுவது” என்றார்.

நீதிபதி ஹேமந்த் குப்தா

வருமான வரிச் செலுத்துபவர்கள் 4 % மட்டுமே’

அப்போது உடனடியாக குறுக்கிட்ட நீதிபதி குப்தா, ” வெறும் 4 % மக்கள் மட்டுமே வருமான வரி கட்டுகிறார்கள் என்பதால் அரசு என்பது அனைவரது நிதி பங்களிப்பிலும் நடத்தப்படுவதில்லை.

ஸாரி… வெறும் 4 சதவீத மக்கள் மட்டுமே வரி கட்டுகிறார்கள். மேற்கொண்டு இந்த பிரச்னைக்குள் நான் செல்ல விரும்பவில்லை” என்றார்.

கிளம்பிய எதிர்ப்பு…

இந்த நிலையில், ‘அரசுக்கு 4 சதவீத மக்கள் மட்டுமே வரிச் செலுத்துகிறார்கள்’ என்ற பொருள்பட நீதிபதி குப்தா தெரிவித்த இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அவரது கருத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஆவேசமாக பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

” * இந்தியாவில் அனைவருமே வரி செலுத்துகிறார்கள். ஒரு ரிக் ஷா ஓட்டுபவர் கூட 5 ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கும் போது, அவர் 18% அதாவது 90 பைசா ஜிஎஸ்டி செலுத்துகிறார். ஹேமந்த் குப்தாவை நீதிபதியாக்கியது யார்? இந்த மனநிலை கொண்ட ஒருவர், ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக எப்படி முடிவெடுப்பார்கள்?

* இந்த கட்டுக்கதை மீண்டும் மீண்டும் கட்டவிழ்த்துவிடப்படுவது திகைப்பாக உள்ளது. ஒவ்வொருவருமே வரிச் செலுத்துகிறார்கள். நீங்கள் ஒரு பிரிட்டானியா பிஸ்கட் வாங்கினால், அந்த நிறுவனம் செலுத்திய வருமான வரியின் ஒரு பகுதி உங்களுடைய பங்களிப்பு.

* அன்புள்ள திரு. நீதியரசர் ஹேமந்த் குப்தா ஜி… ஒவ்வொரு இந்தியனும் GST மூலம் மறைமுக வரி செலுத்துகிறார்கள். இப்போதெல்லாம் பல பெற்றோர்கள் கூட இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிசேரியன் மருத்துவர்கள் சிண்டிகேட்டிற்கு GST செலுத்துகிறார்கள்.

* நீதிபதியின் இந்த கருத்தெல்லாம் பெரும்பாலும் நமது நாட்டின் உச்ச தலைவரின் ( மோடி) உரையில் இருந்தோ அல்லது சில வாட்ஸ்அப் ஃபார்வர்டிலிருந்தோதான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

* ஜிஎஸ்டி, சுங்க வரி, தொழில்முறை வரி, சொத்து வரி, சாலை வரி, சுங்கவரி, முத்திரை வரி, செஸ், கூடுதல் கட்டணம் மற்றும் பலவற்றைப் பற்றி அவர் அறிந்திருக்க வேண்டும். அனைத்தும் 100% மக்களால் செலுத்தப்படுகின்றன.

பதில் கருத்துகள்

தீப்பெட்டி, சோப், டூத் பேஸ்ட்டிலிருந்து பெட்ரோல் வரை இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மறைமுக வரிகளாகவோ அல்லது வேறு ஏதேனும் முறையிலோ வரிச் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

* குறைந்த அளவிலான மக்களே வரிச் செலுத்துகிறார்கள் என்றால், வரிச் செலுத்தக்கூடிய அளவுக்கு சம்பாதிக்கக் கூடியவர்கள் அந்த அளவுக்கு குறைவானவர்களே இந்தியாவில் உள்ளனர் என்றுதான் அர்த்தம்.

இது மக்களின் தவறல்ல… வறுமை, மற்றும் சமூக பாகுபாடு முறை போன்றவறைக் கொண்டிருக்கும் நமது பழங்கால தவறான ‘சிஸ்ட’த்தின் (system) தவறு…” என்றெல்லாம் பதிலடி கருத்துகள் தெறிக்கின்றன.

‘நீதிபதி சொன்னதில் என்ன தவறு இல்லையே..!?’

அதே சமயம், ” நீதிபதி குப்தா சொன்னதில் என்ன தவறு உள்ளது?” எனக் கேள்வி எழுப்பி, அவருக்கு ஆதரவான கருத்துகளும் பதிவிடப்பட்டுள்ளன.

* ” 3-4% சம்பளம் பெறும் இந்தியர்கள் மட்டுமே செலுத்தும் வருமான வரியைப் பற்றி அவர் குறிப்பிட்டது தவறில்லை.

* அனைத்து இந்தியர்களும் ஜிஎஸ்டி மற்றும் எரிபொருள் வரி போன்ற மறைமுக வரிகளை செலுத்துகிறார்கள்தான்.

* உண்மை என்னவென்றால், உயர் நடுத்தர வர்க்கத்தினரும் பணக்கார’ இந்தியர்களும்தான் பெரும்பாலான வரிகளை சுமக்கிறார்கள். ஆனால், அதன் பலன்களை அனைவரும் அனுபவிக்கிறார்கள்.

* மறைமுக வரி என்பது ஒவ்வொருவருவரின் நுகர்வு அடிப்படையில் செலுத்தப்படுவதால், அதனை சமமாக கருத முடியாது. ஏனென்றால், நீங்கள் நிதி நெருக்கடியில் இருந்தால், உங்கள் நுகர்வைக் குறைப்பீர்கள்.

* மேலும் இதர வருமான வரி என்பது, வருமான வரிச் செலுத்தும் 4% மக்கள் மீதான கூடுதல் சுமையாகும். மேலும் அது கட்டாயமும் கூட. இல்லையெனில் சிறைக்குச் செல்ல நேரிடும்” என்று ஆதரவான கருத்துகளும் பதிவிடப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில் வரி எதிர்பார்ப்பு என்ன?

இந்த சர்ச்சைகளெல்லாம் ஒருபுறமிருக்க, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில்,

* 2022 -23 ம் நிதியாண்டுக்கான மறைமுக வரி வசூல், 13 லட்சத்து 30,000 கோடி ரூபாய் கிடைக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 7 லட்சத்து 80,000 கோடி ரூபாய் GST மூலமாக கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

* அதேபோன்று வருமான வரி மூலம், அதாவது நேரடி வரியாக 2022-23-ம் நிதியாண்டில் 7 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்ப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த சர்ச்சை எழ முக்கிய காரணமான ஹிஜாப் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, பள்ளிக்குள் ஹிஜாப் அணிவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்…

கெஜ்ரிவாலுடன் ஸ்டாலின் நெருக்கமாவது ஏன்?!

ஸ்டாலின், கெஜ்ரிவால்

ஞ்சாப் மாநிலத் தேர்தல் வெற்றியால் தேசிய அரசியலில் முக்கிய இடத்தை ஆம் ஆத்மி கட்சி பெற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளராகவும், டெல்லி முதல்வராகவும் விளங்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை, பிரதமர் மோடிக்கு மாற்றாக ஆம் ஆத்மி தலைவர்கள் முன்னிறுத்திவருகிறார்கள்.

அவ்வாறு காங்கிரஸின் ஆம் ஆத்மி-யால் இடத்தைப் பிடித்து விடமுடியுமா..? இந்த நேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நெருக்கம் காட்டுவது ஏன் என்பது உள்ளிட்ட விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

ராகுல் காந்தி நடை பயணம்; முக்கிய தலைவர்கள் தங்கும் 60 கேரவன்களில் என்ன ஸ்பெஷல்?

கன்னியாகுமரியில் கேரவன்கள்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோயாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை நாளை தொடங்குகிறார்.

இந்த நடைபயணத்துக்காக ராகுல் காந்தி மற்றும் அவருடன் செல்லும் தலைவர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன என்பது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

‘2024 ல் பிரதமர் வேட்பாளரா?’ – நிதிஷ் குமார் திட்டவட்டமான பதில்!

நிதிஷ் குமார்

ரும் 2024 மக்களவைத் தேர்தலில் மோடிக்கெதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்கு நிதிஷ் குமார் போட்டியிடப்போகிறார் எனச் செய்திகள் வெளிவந்தன. அதுபோன்ற செய்திகளுக்கேற்றவாறே, நிதிஷ் குமாரும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துவந்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டவர்களை அவர் சந்தித்துப் பேசிய நிலையில், ;2024 ல் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் நிதிஷ் குமாரா?’

என்ற பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. இது குறித்து அவர் தெரிவித்துள்ள திட்டவட்டமான பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்…

வீட்டுக் கடன்: பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள்… எதைத் தேர்வு செய்வது?

வீட்டுக் கடன்

ம்மில் பலருக்கு வீட்டுக் கடனை அரசு வங்கியில் வாங்குவதா, தனியார் வங்கியில் வாங்குவதா என்பதில் எப்போதும் பெரும் குழப்பம் இருக்கும்.

வீட்டுக்கடன் வாங்குவதில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளுக்கு இடையே உள்ள சாதக/பாதகங்கள் என்ன… எதைத் தேர்வு செய்வது என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்…

வெற்றிமாறன்: ‘தமிழ் சினிமாவின் அசராத ‘பேட்டைக்காரன்’ !

வெற்றிமாறன்

‘சினிமா’ எனும் காட்சி ஊடகத்தை பற்றிய முழுமையான புரிதல் வெற்றிமாறனுக்கு நிச்சயம் உண்டு. ஆனால், இதை அவரேகூட ஏற்றுக்கொள்ளமாட்டார்.

இந்த வித்தை அவருக்கு வாய்த்தது எப்படி? அவரின் தந்தை தொடங்கி, சினிமா குறித்து அவருக்கிருந்த பார்வையை மொத்தமாக புரட்டிபோட்ட ஆசான் பாலு மகேந்திராவரை வெற்றிமாறனுக்கு வாய்த்திருக்கும் இக்குணத்திற்கான காரணங்கள் நீண்ட நெடியவை. தன் படைப்புகள் என்னவாக வெளிவர வேண்டும் என்று வெற்றிமாறன் கையாளும் சில அம்சங்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.