சீன அரசினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

சீன மக்கள் குடியரசின் தூதுவர் புலமைப்பரிசில் வழங்கும் விழா இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கம் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதாரப் பாதுகாப்பு அறிவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக சீன மக்கள் குடியரசின் தூதுவர் குய் ஜென்ஹாங் மற்றும் திருமதி.குய் ஜென்ஹாங் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சீன மக்கள் குடியரசின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக கல்விசார்ந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் வண்ணம் அதன் முதற்கட்டமாக சீன மக்கள் குடியரசின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (06) திகதி இலங்கைக்கான சீன தூதுவரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு முதற்கட்டமாக மாதாந்தம் 4000/= வீதம் ஏழு மாதங்களுக்கான அன்பளிப்பு தொகையான 4.3 மில்லியன் ரூபாய் நிதி சீன தூதுவரினால் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான புலமைப்பரிசில் அன்பளிப்பு தொகையும் சீன தூதுவர் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் சீன தூதரகத்தின் உத்தியோகத்தர்கள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கே.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அமரசிங்கம் பகீரதன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைக ளின் அதிபர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களில் பெற்றோர்  கலந்துகொண்டனர்.

Media Unit, – Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.